Bihar Election Result: புது எனர்ஜி கொடுத்த பீகார்! அடுத்து தமிழ்நாடு தான்.. அடித்து சொன்ன மோடி
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி, மேற்கு வங்கம் உட்பட பிற மாநிலங்களில் உள்ள பாஜக தொண்டர்களை "உற்சாகப்படுத்தியுள்ளது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி உற்சாகமாக பேசியுள்ளார்.
பீகாரில் NDA அமோக வெற்றி:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் NDA கூட்டணி 203 இடங்களைப் வென்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, தேஜஸ்வியின் மகா கூட்டணிக்கு இந்த தேர்தல் மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த கூட்டணி 35 இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி பேச்சு:
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி, மேற்கு வங்கம் உட்பட பிற மாநிலங்களில் உள்ள பாஜக தொண்டர்களை "உற்சாகப்படுத்தியுள்ளது" என்றும், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தை விமர்சித்து மேற்கு வங்கத்தில் இருந்து "காட்டு ராஜ்ஜியத்தை" வேரோடு அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.
கங்கை பீகார் வழியாகப் பாய்ந்து வங்காளத்தை அடைகிறது. வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் வழி வகுத்துள்ளது," என்றும் கூறினார்
VIDEO | Bihar Election Results: In his victory address, PM Modi said, “Today’s win has energized BJP workers in Kerala, Tamil Nadu, Puducherry, Assam, and West Bengal. And yes, as the Ganga flows from Bihar to Bengal, Bihar has also paved the way for the BJP’s victory in Bengal.… pic.twitter.com/T6RtCAQwA8
— Press Trust of India (@PTI_News) November 14, 2025
மேலும் இன்றைய வெற்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆம், பீகாரில் இருந்து கங்கை வங்காளத்திற்கு பாயும் நிலையில், பீகாரின் வெற்றி வங்காளத்தில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள 'காட்டு ராஜ்ஜியத்தை' பாஜக உங்களுடன் சேர்ந்து வேரோடு பிடுங்கி எறியும் என்று வங்காளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன்.” என்றார்.






















