பெண்களுக்கு பிரச்சினை என்றால் செளமியா பத்ரகாளியாக மாறி விடுவார் - அன்புமணி
பெண்களுக்கு பிரச்சினை என்றால், அவர் பத்ரகாளியாக மாறி விடுவார் தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி பேச்சு.
தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய அன்புமணி, “இந்த தருமபுரி மாவட்டம் வளம்பெற வேண்டும் என சௌமியாவை வெற்றி பெற செய்வதென முடிவெடுத்துள்ளனர். தருமபுரி பின்தங்கிய மாவட்டம். இதற்காக 44 ஆண்டுகளாக ராமதாஸ் ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளார். எங்கள் நோக்கம் உங்கள் முன்னேற்றம் தான். எங்களுக்கு எந்த வித அரசியல் நோக்கமும் கிடையாது. சௌமியா ஒரு நாட்டிய கலைஞர், எழுத்தாளர். பெண்களுக்காக ஐநா மன்றத்தில் குரல் கொடுத்தவர். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க மாட்டாரா?
பெண்களுக்கு பிரச்சினை என்றால், முதல் ஆளாக நிற்பவர். நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டார். பெண்களுக்கு பிரச்சினை என்றால், அவர் பத்ரகாளியாக மாறி விடுவார். கோவம் அதிகமாக வரும்.
தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்றினால் விவசாய நிலங்கள் செழிக்கும். இந்த திட்டங்கள் நிலுவையில் உள்ளது. இதனை சௌமியா நிறைவேற்ற பாடுபடுவார். சிப்காட் தொழிற்பேட்டை வந்தால், வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கு நான் உறுதி. ஏனென்றால், நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் நீங்கள் முன்பு தேர்வு செய்த எம்பி எதையும் செய்யவில்லை. அதனை சௌமியா முடித்து கொடுப்பார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்கள் முழுமை பெறவில்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. அந்த திட்டங்கள் முழுமை சௌமியாவுக்கு வாய்ப்பு கொடுங்கள். நிலம் அதிகாரத்திற்கு வந்தால், கையெழுத்து போடும் அதிகாரம் வந்தால், தருமபுரி மாவட்ட உள்ள பிரச்சினைகளை நான் 90 சதவீத பிரச்சிடைகளை ஒரே நாளில் தீர்த்துவிடுவேன். எனக்கு எல்லா பிரச்சினைகளும் தெரியும்.
நாங்கள் செய்த தியாகம்
எடப்பாடி பேசுகிறார். நாங்கள் தூரோகம் பண்ணதாக. நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. உங்களுக்காக உழைத்தோம். உங்கள் இருவரையும் முதலமைச்சராக்க உழைத்தோம். நாங்கள் இல்லையென்றால், 2019 ஆண்டு ஆட்சி மாறிப் போயிருக்கும். நாங்கள் செய்த தியாகம் தான், நீங்கள் இரண்டாண்டு ஆட்சியில் இருந்தீங்க.
நீங்க தானாக முன்வந்து இட ஒதுக்கீடு கொடுத்தீர்களா? நாங்கள் போராட்டம் நடத்தி பெற்றோம். அதுவும் தேர்தல் மாலை அறிவிக்கும் போது, அழைத்து கையெப்பம் கேட்டார்கள். கையெழுத்து போட்டால் தான், இட ஒதுக்கீடு கொடுப்போம் என தெரிவித்தார். அப்போது ராமதாஸ்க்கு கோபம் வந்து, வெள்ளை பேப்பரில் கையெழுத்தே போட்டு தருகிறேன். சீட்டே வேண்டாம். இட ஒதுக்கீடு கொடுத்தால் போதும் என ஜி.கே.மணியிடம் தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் அறிப்புக்கு முன்பாக கொடுத்ததால், நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவில் 5 பேர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்தார்கள். அவர்கள் யாரும் இட ஒதுக்கீடு கொடுக்க சொல்லி கேட்கவில்லை. சட்டமன்றத்தில் பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை போட்டு போராட்டம் பண்ணி, மன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தார்கள். ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை. சமூகநீதி பற்றி பேச எடப்பாடிக்கு அருகதையில்லை. நாங்கள் துரோகம் செய்யவில்லை நீங்கள் தான் துரோகம் செய்தீர்கள். சமூக நீதி பற்றி பேசுவது பேஷனாகிடுச்சி.
இங்கே தண்ணீரை வேடிக்கை பார்க்கலாம், ஆனால் குடிக்க முடியாது. ராமதாஸ் இல்லையென்றால், இந்த ஒகேனக்கல் குடிநீர் கிடைத்திருக்காது. முன்னாள் முதல்வர் எடப்பாடி, எங்களை பற்றி பேசுகிறார். உங்களை பற்றி பேசுங்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் என சொல்லுங்கள்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். ராமதாஸ் பற்றி பேசுகிறார். ஏனென்றால் நாங்கள் பாஜகவிற்கு சென்றதால். நாங்கள் 2014-லிருந்து பாஜகவுடன் இருக்கிறோம். இந்தியாவிலேயே சமூக நீதிக்காக பாடுபடுபவர் ராமதாஸ் தான். எந்த நிலையிலும் எங்கள் கொள்கையிலிருந்து விடுபட மாட்டோம்” என்றார்.
ராமதாஸ் பேச்சு
எங்களின் நோக்கம் மக்களுடைய முன்னேற்றம் தான். இந்த மாவட்டத்திற்கு நான் என்ன செய்தேன், என்ன செய்யப் போகிறேன் என்று அன்புமணி சொன்னார். என்னுடைய வாரிசை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் சீராட்டி, பாராட்டி வளர்த்திருக்கிறீர்கள். இந்த மாவட்ட மக்களின் பிரச்சினைகளை நான் மறந்திருந்தாலும், அவர் அடுக்கடுக்காக வைக்கிறார். இந்த மாவட்டத்தை வளர்க்க அன்புமணி போராடுகிறார். அவருடன் இப்பொழுது சௌமியாவும் இணைந்து போராடுகிறார். கற்றாழை விளையும் பூமி இந்த தருமபுரி பூமி. கற்றாழை நாரில் கயிறு தயாரித்து, விற்பனை செய்து, சாமை வாங்கி, கொள்ளு ரசம் வைத்து உண்டவர்கள். எங்கள் மக்கள் சாமை சோறும், கொள்ளு ரசமும் குடிக்க வேண்டுமா? என்று கேட்டேன். ஆனால் இப்போ இந்திய அரசு கொள்ளு, சாமை சாப்பிட வேண்டும் என்கிறது.
நான் சொல்வது கண்டிப்பாக நடக்கும். இன்று இந்த பகுதியில் அழகிய சிறிய வீடுகள் இருக்கிறது. இதை தான் நான் எதிர்பார்த்தேன். இந்த மாவட்டத்தில் மக்கள் ஒரு பெரிய தவறை செய்து வந்தனர். என்னவென்றால், பெண் குழந்தைகள் பிறந்தால், குப்பையில் போடுவார்கள். இதற்காக மறைந்த அம்மையார் தொட்டில் குழந்தை திட்டத்தை தொடங்கினார். ஆனால் இப்பொழுது இல்லை. ஆனால் இனி நடக்காது. சௌமியா எம்பியானால் நடைபெறாது. தமிழ்நாட்டில் ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்க, ராமதாஸ் தான் காரணம். இதை போராடித்தான் கொண்டு வந்தேன். இவ்வாறு பேசினார்.