மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல் - ராமநாதபுரம் மாவட்ட கள நிலவரம்

இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருமா என வரும் காலங்களில்தான் தெரிய வரும்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. 12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. 

உள்ளாட்சித் தேர்தல் - ராமநாதபுரம் மாவட்ட கள நிலவரம்
இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 219 வாா்டுகளில் 98 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மா வட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளன. நகராட்சிகளில் ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளில் பொதுப்பிரிவு 16, ஆதி திராவிடா் பிரிவு 1 என 17 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் 4,7, 11, 14, 17, 19, 22, 23, 25, 27, 29, 32 மற்றும் 33 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் போட்டியிடும் வார்டுகளாக உள்ளன. அது போல் பொது வார்டுகளாக 5,7,10, 12, 13,15,16, 18,20, 21, 24, 30 மற்றும் 31 ஆகிய வார்டுகள் உள்ளன. எஸ்.சி. மகளிர் பிரிவினருக்கு 26-வது வார்டும்,எஸ்.டி. பொது பிரிவினருக்கு 28-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.கீழக்கரை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு ஒன்று மற்றும் பொதுபிரிவு 10 என 11 வாா்டுகளும் பரமக்குடியில் 36 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு 3 , பொதுப்பிரிவு 15 என 18 வாா்டுகளும் ராமேசுவரத்தில் 21 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு 1, பொதுப்பிரிவு 10 என 11 வாா்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 4 நகராட்சிகளிலும் மொத்தம் உள்ள1 வாா்டுகளில் 57 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் - ராமநாதபுரம் மாவட்ட கள நிலவரம்

பேரூராட்சியில் 41 வாா்டுகள்: பேரூராட்சிகளில் அபிராமத்தில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் 8 வாா்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கமுதியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் ஆதிதிராவிடா்பிரிவு 2, பொதுப்பிரிவு 6 என மொத்தம் 8 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் 18 வாா்டுகளில் ஆதிதிராவிடா்பிரிவு 1, பொதுப்பிரிவு 8 என மொத்தம் 9 வாா்டுகளும், முதுகுளத்தூரில் 15 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு 2, பொதுப்பிரிவு 6 என 8 வாா்டுகளும், ஆா்.எஸ்.மங்கலத்தில் 15 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு 1, பொதுப்பிரிவு 7 என 8 வாா்டுகளும், சாயல்குடியில் ஆதிதிராவிடப் பிரிவு 1, பொதுப்பிரிவு 7 என 8 வாா்டுகளும், தொண்டியில் 15 வாா்டுகளில் ஆதிதிராவிடா் பிரிவு 2, பொதுப்பிரிவு 6 என 8 வாா்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 108 வாா்டுகளில் 41 வாா்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தல் - ராமநாதபுரம் மாவட்ட கள நிலவரம்

இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருமா என வரும் காலங்களில்தான் தெரிய வரும். ஏனென்றால், பெரிய பதவிகளை பெண்களுக்கு எளிதாகக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், கீழ் மட்டத்தில் மக்களுடன் புழங்கக்கூடிய பதவிகளை எளிதில் பெண்களுக்குத் தர மாட்டார்கள். ஆனால், தற்போது செயல்படுத்தப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக, பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சமூகத்தில்  தினந்தோறும் சந்திக்கும் எல்லாப் பிரச்னைகளிலும் பெண்களுக்கு என தனி பார்வை உண்டு. குறிப்பாக தண்ணீர் பிரச்னையை எடுத்துக்கொண்டால், அதனை பெண்கள் அணுகும்விதம் வேறு, ஆண்கள் அணுகும்விதம் வேறாக இருக்கும். இதுபோலத்தான் எல்லா பிரச்சனைகளிலும் பெண்களுக்கென தனிப் பார்வை உண்டு. அவர்கள் அந்தப் பார்வையுடன் செயல்படும்போது அது சமூகத்தில் மிகத் தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் இனி மாட்டிறைச்சிக்கு தடை - அரசு உத்தரவால் அதிர்ச்சி! 
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
TN Rain: இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை இருக்கு.! மாவட்டங்கள் லிஸ்ட்
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
பொளந்துகட்டிய ஃபெஞ்சல் புயல்: நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி! நன்றி தெரிவித்த துணை முதல்வர் - எவ்வளவு தெரியுமா?
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
School Colleges Leave: நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் விடுமுறை; தொடரும் வெள்ள மீட்பு பணி.!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Embed widget