மேலும் அறிய

NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்

NEET PG 2024 Exam Date: முதுகலை நீட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேர்வு எப்போது நடைபெறும் என்ற தகவல் கசிந்துள்ளது.

திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் பெரும் விவாதத்துக்கு உள்ளான நீட் முதுகலைத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது.

42,500 இடங்கள்

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.  குறிப்பாக 6,102 அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை/ மத்தியப் பல்கலைக்கழகங்களில் 26,168 எம்.டி. இடங்கள், 13,649 எம்.எஸ். இடங்கள், 922 முதுகலை டிப்ளமோ இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 

ரத்து செய்யப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு

ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே நீட் இளநிலைத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி, கருணை மதிப்பெண்களில் குளறுபடி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. யுஜிசி நெட் தேர்விலும் குளறுபடி நடந்ததாகக் கூறி தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிஎஸ்ஐஆர் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதுகலை நீட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

தேர்வு முறை எப்படி?

நீட் முதுகலைத் தேர்வில் 200 பல்குறி வகை கேள்விகள் இருக்கும். ஒவ்வொன்றும் 4 பதில்களைக் கொண்டிருக்கும். அதில் சரியான. சிறந்த பதிலைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள். தவறாக பதிலளித்தால் 1 மதிப்பெண் கழித்துக் கொள்ளப்படும். மொத்தம் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்குத் தேர்வு நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget