UPSC CDS Results: யுபிஎஸ்சி சிடிஎஸ் 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு; இந்த லிங்கில் செக் செய்யலாம்!
யுபிஎஸ்சி சிடிஎஸ் 2020 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பதை விளக்கமாக தெரிவிக்கிறது ABP நாடு.
யுபிஎஸ்சி சிடிஎஸ் 2020 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளை, upsc.gov.in. என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம். குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப்பணிகளுக்கான குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.
அதேபோல், இந்திய இராணுவத்தில் சேர்வதற்காக ஒருங்கிணைந்த சிடிஎஸ் தேர்வையும் UPSC Combined Defence Services (CDS) நடத்துகிறது. 2020ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சிடிஎஸ் தேர்வு UPSC Combined Defence Services (CDS) தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
மொத்தம் 241 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 225 பணியிடங்கள் ஆண்களுக்கான 113th Short Service Commission Courseஐ சார்ந்தது. எஞ்சிய 16 இடங்கள் 27th Short Service Commission Women ஐ சார்ந்தது. இந்தக் காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்டத் தேர்வில் 147 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 96 பேர் ஆடவர், 51 பேர் பெண்கள். இதில் தேர்வானவர்கள் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஆஃபீசர்ஸ் ட்ரெய்னிங் அகெடமியில் (Officers Training Academy) அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் விவரம் இன்னும் 15 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவுகளை எப்படி செக் செய்வது:
upsc.gov.in என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லவும். ஹோம்பேஜில் இருக்கும் "Final result: Combined Defence Services Examination (I), 2020 (OTA)" என்ற லின்க்கை க்ளிக் செய்யவும். திரையில் UPSC CDS (I) Final Result 2020 என்பது பிடிஎஃப் வடிவில் டவுன்லோட்.அதை ஸ்க்ரோல் செய்து முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
முடிவுகளை பிரின்ட் அவுட் பிரதியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நீண்ட நாட்களாக காத்திருந்த இந்த முடிவுகள் தற்போது வெளியாகியிருப்பது தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கான பணியிடங்களை தேர்வு செய்யும் தேர்வு என்பதால், எப்போதுமே இந்த தேர்வு மீது ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நிலையில் தன் தற்பேது யூபிஎஸ்சி சிடிஎஸ் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முடிவுகளை எளிதில் அறிந்து கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் வரிசை வகையாக முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை தொடர்ந்து அதற்கான பணி ஒதுக்கீடுகள் இருக்கும் என தேர்வாணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த தேர்வுகளுக்கு அதிக முயற்சி எடுத்து , நீண்ட நாள் உழைப்பில் தேர்வை எதிர்கொள்பவர்களே அதிகம். அந்த வகையில் இந்த முறை தேர்ச்சியடைபவர்களும் கடும் முயற்சிகளுக்கு சொந்தக்காரர்களாகவே இருப்பர். கடந்த ஆண்டிற்கான முடிவுகளே இப்போது தான் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.