மேலும் அறிய

Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் யுனெஸ்கோ வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கை (Global Education Monitoring Report 2023) வெளியிடப்பட்டது.

குறிப்பாக ‘Technology in Education: A Tool on Whose Terms’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், பள்ளிகளில் ஸ்மார்ட் போன்களுக்கு உலகளாவிய அளவில் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

’’தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி, கற்றலை மேம்படுத்தவில்லை. மாறாக மாணவர்களின் நல் வாழ்வை மோசமாக்குகிறது. மொபைல் சாதனங்கள் மாணவர்களை திசை திருப்புகின்றன; 14 நாடுகளில் கற்றலில் மோசமான அனுபவத்தை உருவாக்குகின்றன. எனினும் 4 நாடுகளுக்கு ஒரு நாட்டுக்கும் குறைவாகவே பள்ளிகளில் ஸ்மார்ட் போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  

Smartphone Ban: பள்ளிகளில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு உலகளாவிய தடை: யுனெஸ்கோ அதிரடி 

மாணவர்கள் குறிப்பாக 2 முதல்17 வயது உடைய நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், "அதிக நேரம் திரையிலேயே செலவிடுவது (higher screen time) அவர்களின் நல்வாழ்வைக் குறைக்கிறது. குறைவான ஆர்வம், சுய கட்டுப்பாட்டை உண்டாக்குகிறது. நிலையில்லாத உணர்ச்சிகளை உருவாக்குகிறது. அதிக கவலையையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகிறது" என்று கண்டறியப்பட்டது. 

கற்றல் திறனை மேம்படுத்தும்

பள்ளிகளில் மொபைல் போன்கள் தடை செய்யப்படுவது பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்தும். குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, மனிதர்கள் மீது ஆளுமை செலுத்தக்கூடாது. இதில் மானுடர்களை மையப்படுத்திய பார்வை வேண்டும். 

கல்வி நிறுவனங்களில் தகவல் கசியும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 16 சதவீத நாடுகள் மட்டுமே வகுப்பறையில், தகவல் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. ஏராளமான தகவல்கள் முறையான வழிமுறைகள் இல்லாமல் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இதனால் மாணவர்களின் தகவல்கள் கல்வி தவிர்த்த பிற காரணங்களுக்காகவும், பொழுதுபோக்கு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவை உரிமை மீறலாகும். இது சரிசெய்யப்பட வேண்டும். 

கற்றலைக் கைவிட்ட 50 கோடி பேர்

ஆன்லைன் கற்றலால் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததுதான். கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், ஆன்லைன் மட்டுமே கொண்ட கற்பித்தல் முறையால், சுமார் 50 கோடி மாணவர்கள் உலகளாவிய அளவில் கற்றலைக் கைவிட்டனர். 

இந்த நிலையில் உலக நாட்கள், தொழில்நுட்பத்தைக் கல்வியில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தாங்களாகவே விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அந்தக் கற்றல், மனிதர்களுக்குப் பதில் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்களை முதன்மைப்படுத்திய கற்றலாக இருக்க வேண்டும்.  

இவ்வாறு யுனெஸ்கோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget