மேலும் அறிய

UGC NET 2022: தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வு - மறுதேதி அறிவிப்பு

தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட 2021 டிசம்பர் மாத தேசியத் தகுதித் தேர்வுக்கான (நெட்) மறுதேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட 2021 டிசம்பர் மாத தேசியத் தகுதித் தேர்வுக்கான (நெட்) மறுதேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம்நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த தேசியத் தேர்வுகள் முகமை முடிவு செய்தது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதையடுத்து நெட் தேர்வுகள் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் நெட் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகின. 

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட் தேர்வு) ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. 2021 டிசம்பர் தேர்வுகள் ஜூலை 08, 09  தேதிகளில் நடைபெற்றது. மீதமுள்ள தேர்வுகள் 11, 12ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 2022 ஜூன் தேர்வுகள் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ளன. 


UGC NET 2022: தொழில்நுட்பப் பிரச்சினையால் நிறுத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வு - மறுதேதி அறிவிப்பு

தொழில்நுட்பக் கோளாறு

இதற்கிடையே ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில், சில மாநிலங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், கேரளா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வை எழுதமுடியாமல் போனவர்கள் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை நடைபெறும் நெட் தேர்வில், பங்கேற்றுத் தேர்வை எழுதலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in, ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

தேர்வர்கள் இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in

*

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Brics: 5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
5வது தலைமுறை போர் விமானம், சுகோய் ஜெட், S-500 - லிஸ்ட் போட்ட புதின் - டிக் அடிப்பாரா பிரதமர் மோடி?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
CM Vijay: 2 தொகுதி இடைத்தேர்தல் பணிகள்.. 11 அமைச்சர்கள், 10 MLAக்களை களமிறக்கிய விஜய்.. வரலாறு படைப்பாரா?
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
பென்ஷன் வராமல் அல்லல்படும் முதியவர்கள்.. செப்டம்பர் மாத பணம் எப்போது கிடைக்கும்? - வெளியான தகவல்!
JCD Prabhakar:
JCD Prabhakar: "சாதி, மதம் எதுவுமே கேட்கல.. எல்லாமே விஜய்தான்.. அதைத்தாண்டி ஒன்னுமில்ல.." சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி
Maruti Car: ரூ.5 லட்சம் காரில் 3 சிலிண்டர் இன்ஜினை அறிமுகப்படுத்தும் மாருதி - மைலேஜ் கூடுமா? விலை உயருமா? அம்சங்கள்
ரூ.5 லட்சம் காரில் 3 சிலிண்டர் இன்ஜினை அறிமுகப்படுத்தும் மாருதி - மைலேஜ் கூடுமா? விலை உயருமா? அம்சங்கள்
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Embed widget