UGC Net admit card: வெளியானது நெட் தேர்வு அட்மிட் கார்டு.. எப்படி பதிவிறக்கம் செய்யலாம்.. முழு விவரம்
ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான UGC NET தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு தற்போது வெளியாகியுள்ளது
யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது.
யுஜிசி நெட் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு :
ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் தேர்வுகளுக்கான யுஜிசி நெட் அட்மிட் கார்டு 2024 ஐ தேசிய தேர்வு முகமை, என்டிஏ வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான – ugcnet.nta.ac.in -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த அட்மிட் கார்டானது ஜனவரி 3, 6, 7,8 ஆகிய தேதிகளில் நடைப்பெறும் தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களின் UGC NET அட்மிட் கார்டை 2024 பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள முறையை பின்பற்றலாம்:
1. UGC NET-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான: ugcnet.nta.ac.in இல் உள்ள UGC NET போர்ட்டலுக்குச் செல்லவும்.
2. அனுமதி அட்டை இணைப்பை அணுகவும்: முகப்புப் பக்கத்தில் உள்ள "UGC NET அட்மிட் கார்டு 2024" இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. புதிதாக திறக்கப்பட்ட பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சாவை உள்ளிடவும்
4. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், அப்போது உங்கள் அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
5.உங்கள் அனுமதி அட்டை திரையில் தோன்றும். விவரங்களைச் சரிபார்த்து ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
6. எதிர்கால தேவைக்காக அட்மிட் கார்டின் பிரிண்ட் அவுட் ஒன்றை எடுத்துவைத்துக்கொள்ளலாம்
புகார் இருந்தால்:
அட்மிட் கார்டைப் பதிவிறக்கும்போது சிக்கல்களை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள் அல்லது விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் 011-40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் உதவி பெறலாம்.
இதையும் படிங்க: Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
தேர்வு நடைப்பெறும் முறை:
தேர்வு முழுக்க முழுக்க கணினி சார்ந்த முறையில்( Computer Based Test) நடத்தப்படும். இது இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும், ஒன்று மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் மற்றும் புறநிலை வினாக்கள் ( Objective type) வகையில் அமைந்திருக்கும். மொழி சார்ந்த பாடங்களைத் தவிர, வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும்.
தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் UGC NET 2024 இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in பார்க்கலாம்.