மேலும் அறிய

TNPSC : “ஆசையை அடக்கலாம்... இது எப்படி சாத்தியம்” - அவசியமா? அலட்சியமா? மனம் இறங்குமா டிஎன்பிஎஸ்சி..?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு மிக முக்கிய அம்சத்தை கவனத்தில் கொள்ளாதது கவலை கொள்ளச் செய்கிறது. அதுதான் - 'இயற்கையின் அழைப்பு'.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மிக நல்ல செய்தி.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு 11 லட்சம்; குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். நாளை (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் குரூப்-2 தேர்வுக்கு இதுவரை 10 லட்சம் பேர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போதுமே, தேர்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்யும். அநேகமாக வேறு எந்தத் தேர்வாணையத்தை விடவும் மிக நேர்த்தியாக நடத்தும். இது விஷயத்தில், 'டிஎன்பிஎஸ்சி'யின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது.

ஆனாலும், ஒரு மிக முக்கிய அம்சத்தை கவனத்தில் கொள்ளாதது கவலை கொள்ளச் செய்கிறது. அதுதான் - 'இயற்கையின் அழைப்பு'.

எழுத்துத் தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். அத்தோடு, தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, தேர்வு மையத்தில் தத்தம் இருக்கையில் வந்து அமருமாறு தேர்வுகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையும் சேர்த்தால் தொடர்ந்து  நான்கு மணி நேரம், ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். இடையில் ஓரிரு நொடிகள் எழுந்து நிற்கக் கூட, பொதுவாக, அனுமதி இல்லை. இது எத்தனை சிரமங்களை ஏற்படுத்தும்?

காலை 9;30க்குத் தேர்வு தொடங்குகிறது. 8:30க்குத் தேர்வர்கள் தமது இருக்கைக்கு வந்தாக  வேண்டும். இதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாக வீட்டை விட்டுக் கிளம்பி இருப்பார்கள். உடல் உபாதைகளால் ஏற்படும் சிக்கல், தேர்வர்கள் சந்திக்கும் படுமோசமான சவால். 

தேர்வு நேரத்தின் போது 'இயற்கை அழைப்பு', காரணமாகத் துடிதுடிக்கப் பதட்டத்துடன் தென்படும்  பலரை, தேர்வுக் கண்காணிப்பாளராக, எனது அனுபவத்தில் நானே பலமுறை பார்த்து இருக்கிறேன். அனுமதிக்கப் பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டு இயன்றவரை உதவியும் இருக்கிறேன்.

தமது வருங்காலத்தை நிர்ணயிக்கிற மிக முக்கியமான போட்டியில், ஏராளமான கனவுகளைச் சுமந்து கொண்டு, மிகச் சிறந்த முறையில் தயார் செய்துகொண்டு,  தேர்வை எதிர்கொள்கிற  இளைஞர்களை 'பாடாய்ப் படுத்துகிற' சோதனையான, சோகமான 'அனுபவம்' இந்த இயற்கை அழைப்பு. 

குறிப்பாகப் பெண் தேர்வர்கள் 'சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்' படுகிற அவஸ்தை சொல்லி மாளாது. 

தமது அறிவுக்கான போட்டிக் களமாகத் தேர்வை எதிர்பார்த்து வருகிற தேர்வர்கள், தமது 'உடல் தகுதி', 'தாங்கும் சக்தி'யைச் சோதிக்கிற பரிசோதனைக் கூடமாக அது மாறிவிட்டதைப் பரிதாபத்துடன் கண்கலங்க எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இந்த அவல நிலை இன்னும் தொடர்கிறது - அதுவும் ஒரு மணி நேரம் கூடுதலாக! 

இயற்கை அழைப்புகளையே கூட விடுங்கள். 

ஒரே இடத்தில், உட்கார்ந்த நிலையில் நான்கு மணி நேரம்! சர்வ வல்லமை பொருந்திய பெரிய மனிதர்களை இவ்வாறு உட்காரச் சொல்ல வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு இதன் கடுமை புரியும், மாண்பமை நீதிமன்றங்கள் சுயமாக இந்த பிரச்சினையை கையில் எடுக்கலாம். ஆனால் உணர்ச்சி பூர்வமான சம்பவங்களில் காட்டுகிற அக்கறையை, அறிவுபூர்வ கோரிக்கைகளில் காட்டுவது இல்லை. வாழ்க!

 இதிலே கவனத்தில் கொள்ள வேண்டியது - டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத, பல பிரிவினருக்கு, வயது உச்சவரம்பு இல்லை. நல்லதுதான். ஆனால், 40 வயதை கடந்த தேர்வர்கள், நான்கு மணி நேர 'சித்திரவதையை' சகித்துக் கொள்ள வேண்டும். இது எந்த வகையில் நியாயம்? உண்மையில் இது மனித உரிமைகளுக்கு, மனித நாகரிகத்துக்கு எதிரானது. 

மூன்று மணி நேரத் தேர்வு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். இது ஒன்றும் கடினமான பணி அல்ல. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது  - மொழிப் பிரிவு, பொதுப் பாடப் பிரிவு. இரண்டுக்கும் இடையே சில நிமிட இடைவெளி மிக நிச்சயம் சாத்தியம்தான்.  

இதுவும் அல்லாமல், பல மையங்களில் தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தனித்தனி கழிப்பறைகள் இருப்பது இல்லை. பல இடங்களில் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் எப்போதுமே பிரசினை!

இளம் தேர்வர்களுக்கு மிகப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்தப் பிரசினைக்குத் தீர்வு காணத் தேர்வாணையம் உடனடியாக முனைந்தால் பெருத்த மனிதாபிமான உதவியாக இருக்கும். குறைந்த பட்சம் இது தொடர்பான அறிவுறுத்தல்களை, தேர்வு மையக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வர்களுக்கு விரிவாகத்  தெரியப் படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 

தேர்வு தொடர்பான ஒவ்வொரு அம்சத்திலும் துல்லியமாகத் திட்டமிட்டுத் திறம்பட செயல்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், இயற்கையின் அழைப்புகளுக்கு நல்ல தீர்வு காண வேண்டும். இது எல்லாருக்குமான இயற்கை நீதி!

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget