மேலும் அறிய

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

தமிழைப் பொறுத்தவரையில் அனைத்துக் கேள்விகளும் எளிதாக இருந்தன. பொது அறிவுப் பகுதி சுமாராக இருந்தது.

7,382 அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 21.8 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 4 தேர்வில் கேள்விகள் எப்படிக் கேட்கப்பட்டிருந்தன என்பது பற்றித் தேர்வை எழுதியவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தமுள்ள 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படவுள்ளது என்று கடந்த மார்ச் 29ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 316 தாலுகா பகுதிகளில் 7,689 மையங்களில் இன்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 503 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இம்மையங்களில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் இந்த தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 534 பறக்கும் படைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.

இத்தேர்வுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று சிறப்புப் பேருந்துகள் இயங்கின.

இந்த நிலையில், குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது என்று தேர்வை எழுதியவர்கள் சிலரிடம் கேட்டோம். 

சந்தியா, குரூப் 4 தேர்வை எழுதியவர்

தமிழைப் பொறுத்தவரையில் அனைத்துக் கேள்விகளும் எளிதாக இருந்தன. பொது அறிவுப் பகுதி சுமாராக இருந்தது. கணிதத்துக்குத்தான் நேரம் அதிகம் தேவைப்பட்டது. கணிதக் கேள்விகள் ஸ்டெப்ஸ் நிறைய போட்டு, விடையைக் கண்டுபிடிக்கும் வகையில் இருந்தன. குறிப்பாகக் கணக்குகள் யோசித்து யோசித்துப் போட வேண்டி இருந்ததால் அதிக நேரம் தேவைப்பட்டது. 

அறிவியலில் இருந்து 8 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, அரசியலமைப்பு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கேட்கப்பட்டன. சற்றே ட்விஸ்ட் செய்யப்பட்டு, கேள்விகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

பெரும்பாலான கேள்விகள் (சுமார் 98 கேள்விகள்) 10ஆம் வகுப்பு வரையிலான பாடப் பகுதியில் இருந்துதான் கேட்கப்பட்டன. 10ஆம் வகுப்புத் தாண்டிய பாடத்திட்டத்தில் இருந்து ஓரிரு கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. 

ஸ்ரீலிபிரியா

தேர்வு எளிதான முறையில்தான் கேட்கப்பட்டிருந்தது. பணியில் இருந்துகொண்டே தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். படிக்கக் கூடுதல் நேரம் கிடைக்காததால், அப்படியே வந்து எழுதினேன். எனக்கே தேர்வு எளிதாக இருந்த நிலையில், முறையாகப் படித்தவர்கள் நிச்சயம் தேர்ச்சி பெற வாய்ப்பு உண்டு. கணிதக் கேள்விகள் நிறைய நேரம் எடுத்துத் தீர்க்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன.  

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

பரத்

தமிழ், கணிதம் இரண்டும் எளிதாக இருந்தது. கணக்குப் பாடத்தில் 2, 3 கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன. பெரும்பாலும் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வரலாறு, பொது அறிவுப் பகுதி ஆகியவற்றில் இருந்து எப்போதும்போல் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் கேள்விகளே வந்தன. 

குரூப் 2 தேர்வைப் போல, நடப்பு நிகழ்வுகள் இந்த முறை அதிகம் கேட்கப்படவில்லை. நடப்பு நிகழ்வுகள் குறைவாகத்தான் கேட்கப்பட்டிருந்தன. 

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

சஹானா

பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து முழுமையாகக் கேட்காமல், தமிழ் தெரிந்த எல்லோருமே நல்ல மதிப்பெண்களைப் பெறும் வகையில் பொதுவான வகையில் கேள்விகள் இருந்தன. பெரும்பாலும் பழைய புத்தகத்தில் (2014 பாடப்புத்தகம்) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 

TNPSC Group 4 Exam: கணிதம் கஷ்டமா? எந்தப் பகுதி எளிது? கட்-ஆஃப்... குரூப் 4 தேர்வு பற்றி தேர்வர்கள் கருத்து என்ன?

அறிவியல், அரசியலமைப்புப் பாடப்பகுதிகளும் எளிமையாகவே இருந்தன. மிகவும் டெக்னிக்கலாக, சிக்கலாக கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. பெரும்பாலான கேள்விகள் எளிமையாக இருந்ததால், கட்- ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும். இந்த முறை 170 முதல் 180 வரையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget