TNPSC group 2 Exam Pattern: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: மொத்த பணியிடங்கள் விவரம்..!
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தொடர்பான அறிவிப்பாணை வருகிற பிப். 23 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார்.
அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேதி வரும் மே 21 ம் தேதி தேர்வு நடைபெறும் என்றார். மேலும், இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவித்தார்
அதேபோல், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தொடர்பான அறிவிப்பாணை வருகிற பிப். 23 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
TNPSC குரூப் 2 தேர்வு முறை :
- தமிழில் எழுத விரும்புவோர்களுக்கு பொதுத்தமிழ் கேள்விகள் - 100, பொது அறிவு - 75, ஆப்டியூட் - 25 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
- ஆங்கிலம் வழியில் எழுத விரும்புவோர்களுக்கு பொது ஆங்கிலம் கேள்விகள் - 100,பொது அறிவு - 75, ஆப்டியூட் - 25 என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
- இந்த 200 கேள்விகளுக்கான மொத்த மதிப்பு 300
- இந்த 300 மதிப்பெண்களில் 90 மதிப்பெண் கீழ் பெற்றவர்கள் தகுதியற்றவர்கள்
மொத்த பணியிடங்கள் :
- இன்டர்வியூ போஸ்ட் - 116 ஆகவும், நாஃன் இன்டர்வியூ போஸ்ட் - 5,413 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்