மேலும் அறிய

Group 2 2A Exam: நாளை நடைபெறும் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு; முக்கிய விதிமுறைகள் வெளியீடு..

TNPSC Group 2 2A Mains Exam 2023: குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது.

குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு

2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.

4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு இவர்களுக்கு நாளை (பிப்ரவரி 25-ம் தேதி) நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின.

Group 2 2A Exam: நாளை நடைபெறும் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு; முக்கிய விதிமுறைகள் வெளியீடு..

இந்த நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியானது. இதில் முகிய விதிமுறைகள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* காலை 9.30 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம் ஆகும். 

*அதேபோல மதியன் 2 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு1 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம் ஆகும். தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

*தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டியது அவசியம். 

* அத்துடன் ஆதார் அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / பான் அட்டை / வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். 

* கருப்பு மை அடங்கிய பேனாவை மட்டுமே தேர்வெழுத எடுத்துச்செல்ல வேண்டும். 

* பதிவெண்ணைத் தவறாக எழுதினால், 2 மதிப்பெண்கள் பிடித்துக் கொள்ளப்படும். 

* தேர்வர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் விடைத் தாளில் ஏதேனும் எழுதினால், விடைத் தாள் செல்லாததாகக் கருதப்படும். 

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget