Group 2, 2A Mains Hall Ticket: குரூப் 2, 2ஏ மெயின்ஸ் ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC Group 2, 2A Mains 2023 Hall Ticket: குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. முன்னதாக அறிவித்தது. பின்னர், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மெயின் தேர்வுகள் எனப்படும் பிரதான தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் தேர்வுக்கு 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம் ஆகும்.
ஏன் தாமதம்?
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின.
ஹால் டிக்கெட் வெளியீடு
இந்த நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வின் ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
* தேர்வர்கள் https://apply.tnpscexams.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
* அதில் உள்ள ஹால் டிக்கெட்டைக் காணலாம்.
* ஹால் டிக்கெட்டை பிற்காலப் பயன்பாட்டுக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/Press%20Release_12.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.