மேலும் அறிய

IIT Madras: மார்பகப் புற்றுநோய்: இந்தியாவில் அதிர்ச்சி தரும் மரபணு பாதிப்பு! ஐஐடி சென்னை ஆய்வு சொல்வது என்ன?

பல்வேறு மரபணு சோதனை, வம்சாவளி சார்ந்த தரவுத்தளங்கள், துல்லியமான புற்றுநோயியல் வழிகாட்டுதல்களின் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு பரம்பரை மரபணு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடி சென்னை, கர்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கிருமிவரிசை (germline) ஆய்வுகளில் ஒன்றான இது, மரபுவழி ஆபத்தில் பெரும்பகுதி ‘BRCA1/2’ (மார்பகப் புற்றுநோய் மரபணுக்கள் 1 & 2) க்கு அப்பால் உள்ளதை எடுத்துரைக்கிறது. பல்வேறு மரபணு சோதனை, வம்சாவளி சார்ந்த தரவுத்தளங்கள், துல்லியமான புற்றுநோயியல் வழிகாட்டுதல்களின் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

மார்பகப் புற்றுநோய் மரபணு ஆய்வு

ஐஐடி சென்னை, கர்கினோஸ் ஹெல்த்கேர் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலேயே மிகப்பெரிய மார்பகப் புற்றுநோய் மரபணு ஆய்வுகளில் ஒன்றை நடத்தியுள்ளனர்.

சென்னை குமரன் மருத்துவமனை, சென்னை மார்பக மையம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு, புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய பரம்பரை மரபணு மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரபணு மாற்றங்களில் பெரும்பாலானவை பரவலாக அறியப்பட்ட 'BRCA1' மற்றும் 'BRCA2' மரபணுக்களுக்கு அப்பாற்பட்டவையாகும்.

தற்போது இந்தியாவில் பின்பற்றப்படும் மரபணு சோதனை முறைகள் பெரும்பாலும் 'BRCA' மரபணுக்கள் அல்லது ஹாட்ஸ்பாட் அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் அத்தகைய சோதனை முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

நாடு முழுவதும் விரிவுபடுத்துவது அவசியம்

இந்திய மார்பகப் புற்றுநோய்க்கு உயர்தர மரபணு அடிப்படைத் தரவுகளை வழங்குவதன் மூலம், வம்சாவளி சார்ந்த துல்லியமான புற்றுநோய் சிகிச்சை, குடும்ப ரீதியான புற்றுநோய் அபாயக் குறைப்பு உத்திகள், மேம்படுத்தப்பட்ட கீமோதெரபி பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இந்த ஆய்வு முக்கிய அடித்தளத்தை அமைத்துள்ளது. இந்தியாவின் தனித்துவமான மக்கள்தொகை அமைப்பு, நோய் பாதிப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மரபணு கொள்கைகளை உருவாக்க, இத்தகைய ஆய்வுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் புற்றுநோயியல் துறையில் புகழ்பெற்ற உயர்தர ஆய்வு இதழான BMC Cancer (https://doi.org/10.1186/s12885-025-15360-w)-ல் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஐடி சென்னை உயிரிதொழில்நுட்பத் துறை, தேசிய புற்றுநோய் திசு வங்கி ஜான் பீட்டர், ஜெயலட்சுமி ஜோதி, அவ்ராஜித் சக்ரவர்த்தி, எஸ்.மகாலிங்கம், கர்கினோஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பானி ஜாலி, ராஜ்தீப் ரஹா, வினோத் ஸ்காரியா, ஸ்ரீதர் சிவசுப்பு, குமரன் மருத்துவமனை, சென்னை புற்றுநோயியல் துறையின் சுவாமிநாதன் கணபதி ராமன், சென்னை மார்பக மையத்தின் செல்வி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளனர்.

ஜெர்ம்லைன் டிஎன்ஏ பகுப்பாய்வு

ஐஐடி சென்னையின் தேசிய புற்றுநோய் திசு வங்கியிலிருந்து பெறப்பட்ட 479 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் 'ஜெர்ம்லைன்' டிஎன்ஏ இந்த ஆய்வுக்காக பகுப்பாய்வு செய்யப்பட்டது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரம்பரை மார்பகப் புற்றுநோய் குறித்த மிக விரிவான தரவுத்தொகுப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் முதலாவது, மிகப்பெரிய திறந்தநிலை புற்றுநோய் மரபணு தரவு ஆதாரமான 'பாரத் கேன்சர் ஜினோம் அட்லஸ்'ல் இது ஒரு பகுதி என்றும் ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
School Student: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.1000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
சிவகங்கை இளைஞர்களே! நவம்பர் 13 வேலைவாய்ப்பு முகாம்: வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரிய வாய்ப்பு!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!
விழுப்புரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை உதவித்தொகை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
மீண்டும் மீண்டுமா? ராணிப்பேட்டையிலும் கண்டறியப்பட்ட போலி நூல்கள்! - பின்னணியில் யார்?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, சென்னைக்கு என்ன?
"Diversion politics, துணிச்சல் இல்லாத முதல்வர்" - எதிர்க்கட்சித்தலைவர் கடும் தாக்கு!
Embed widget