TNPSC Group 1 Notification: டிஎன்பிஎஸ்சி குரூப் 1பி தேர்வு: மே 22 வரை விண்ணப்பிக்கலாம்- தேர்வு முறை, பிற விவரங்கள் இதோ!
TNPSC Group 1B Notification 2024: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பணிக்கான காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் 1 பி, குரூப் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதற்கு மே 22 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாவட்டக் கல்வி அதிகாரி பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) – 21 பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்துக் காணலாம்.
வயது வரம்பு
உதவி ஆணையர் – 34 (இந்து மதத்தினர் மட்டும்)
பிசி, பிசி முஸ்லிம்கள், எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு - 39
கல்வித் தகுதி
* ஒரு பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு முடித்த பட்டம் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு அல்லது
* 3 ஆண்டுகளுக்கும் குறையில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லது ப்ளீடர் பணி
* இந்து சமய அறநிலையத் துறையில் தலைமை கிளார்க் அல்லது மேலாளர் அல்லது கண்காணிப்பாளர் அல்லது கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3 அல்லது கிரேட் 3 நிர்வாக அலுவலர் பணி
தேர்வு முறை
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்காணல்
முதல்நிலைத் தேர்வு
பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரத்தில்) – 175 கேள்விகள்
திறனாய்வு மற்றும் மனத்திறன் தேர்வு – 25 கேள்விகள்
- கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வு
உதவி ஆணையர் பதவிக்கு
முதல் தாள் - தமிழ் தகுதித் தேர்வு (10ஆம் வகுப்புத் தரம்) – 100 மதிப்பெண்கள்
இரண்டாம் தாள் – பொதுப் பாடம் (பட்டப் படிப்பு தரம்)- – 250 மதிப்பெண்கள்
மூன்றாம் தாள் – இந்து சமயம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்
4ஆம் தாள் – சட்டம் (பட்டப் படிப்பு தரம்)- 250 மதிப்பெண்கள்
மொத்தம் – 750 மதிப்பெண்கள்
நேர்காணல் – 100 மதிப்பெண்கள்
ஒட்டு மொத்தம் – 850 மதிப்பெண்கள்
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 419 0958 என்ற இலவச எண்ணை அழைக்கலாம். (அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அழைக்கலாம்.)
விண்ணப்பக் கட்டணம்:
முதல்நிலைத் தேர்வுக்கு – ரூ.100
முதன்மைத் தேர்வுக்கு – ரூ. 200
சிறப்புப் பிரிவினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப கட்டணத்தில் சலுகையோ, நீக்கமோ உண்டு.
முழுமையாக விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/english/05_2024_ENG_.pdf என்ற அறிவிக்கையைக் காணலாம். இதில் விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/