மேலும் அறிய

TNPSC Age Limit: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40-ஆக உயர்த்துக.. ராமதாஸ் வலியுறுத்தல்

TNPSC Group 1 Exam Age Limit: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குரூப் 1 பணிகளுக்குத் தகுதியான பலர் தேர்வில் பங்கேற்கத் துடிக்கும்போது, வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமற்றதாகும்.

தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியர் 18 பேர், காவல் துணை கண்காணிப்பாளர் 26 பேர், வணிக வரித்துறை உதவி ஆணையர் 25 பேர், கூட்டுறவு துணைப் பதிவாளர் 13 பேர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் 7 பேர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி மூவர் என மொத்தம்  6 வகையான பணிகளுக்கு 92 பேர் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கிவிட்ட நிலையில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான  அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

வயது வரம்பு போதாது

குரூப் 1 தேர்வுகளை எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மட்டும் 39 வயது வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், குரூப் 1 தேர்வுகள் அதிக அளவில் நடத்தப்படுவதில்லை என்பதால், அனைத்துத் தரப்பினருக்கும் போதிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வயது வரம்பு போதுமானது அல்ல.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு ஒருமுறை குடிமைப்பணி தேர்வுகளை நடத்துகிறது. அதனால், அந்த அமைப்பு நிர்ணயித்துள்ள வயது வரம்புக்கு உட்பட்ட தேர்வர்கள் அதிக முறை தேர்வுகளை எழுத முடியும். ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவ்வாறு   நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிகளில் குரூப் 1 தேர்வுகளை நடத்துவதில்லை. சில நேரங்களில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் தேர்வே நடத்தப்படாமல் இருந்துள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை 17 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இக்காலத்தில் 8 முறை மட்டும்தான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சரியான கால இடைவெளியில் தேர்வுகளை நடத்தாத தேர்வாணையத்திற்கு, வயது வரம்பை மட்டும் குறைவாக நிர்ணயிக்க உரிமை கிடையாது.

TNPSC Age Limit: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40-ஆக உயர்த்துக..  ராமதாஸ் வலியுறுத்தல்

மலைக்கும், மடுவுக்கும் இடையில் வயது

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக அரசும் அதையேற்று 2018-ஆம் ஆண்டில் 2 ஆண்டுகளும், 2021-ஆம் ஆண்டில்  இரு ஆண்டுகளும் வயது வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட வயது வரம்புக்கும், தேர்வர்கள் கோரும் வயது வரம்புக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலானது ஆகும். இந்த இடைவெளியை குறைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இந்தியாவில் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வுகளில் பங்கேற்பதற்கான வயது வரம்பு தமிழகத்தை விட அதிகம் ஆகும். குஜராத், ஹரியாணா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் வயது வரம்பு 45 ஆகவும், ஆந்திராவில் 47 ஆகவும், தெலங்கானாவில் 49 ஆகவும், கேரளத்தில் சில பணிகளுக்கு 53 ஆகவும் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் வயது வரம்பை உயர்த்த அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மறுத்து வருவது அநீதி.

சமூக நீதியில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கிறது. அது குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பிலும் எதிரொலிக்க வேண்டும். மாறாக, வயது வரம்பைக் கடைப்பிடிப்பதில் உறுதியைக் காட்டி, தேர்வர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கக் கூடாது. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் குரூப் 1 தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.''

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
“கோட்டூர்புரம் செல்லாத உதயநிதி” குறிஞ்சி இல்லத்திற்கே ஓடிவந்த துரைமுருகன்..!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
சபரிமலை சீசன் தொடங்கி 12 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Embed widget