TRB TET Exam 2025: டெட் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 86% பேர் வருகை; இன்று 2ஆம் தாள்- முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB TET Exam 2025: இன்று நடைபெற உள்ள இரண்டாம் தாள் டெட் தேர்வுக்கு 3,73,438 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 1,241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 92,412 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 367 மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செம்மையாக நடைபெற்றது. 14,958 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. T
2025ஆம் ஆண்டுக்கான மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், நேற்று 15.11.2025 என்று முதல் தாளான TNTET Paper-I தேர்வு நடைபெற்றது. தாள் II இன்று (16.11.2025) TNTET Paper-II தேர்வு நடைபெற உள்ளது.
4.40 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பம்
முதல் தாள் தேர்வுக்கு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதை எழுத மொத்தம் 1,07,370 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
86.07 சதவிகிதம் பேர் எழுதிய தேர்வு
இவர்களில் 92,412 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 367 மையங்களில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செம்மையாக நடைபெற்றது. 14,958 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. TNTET - தாள் I- 15.11.2025 அன்று தேர்வு எழுதியவர்கள் 86.07 சதவிகிதம் ஆகும். தேர்வு எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.
3.73 லட்சம் பேர் விண்ணப்பம்
அதேபோல இன்று நடைபெற உள்ள இரண்டாம் தாள் டெட் தேர்வுக்கு 3,73,438 பேர் தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 1,241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
முதல் தாளைவிட இரண்டாம் தாளுக்கே அதிக தேர்வர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்று வருகைப் பதிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதற்கு இந்தத் தேர்வு?
அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆர்டிஇ எனப்படும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற முடியும். கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/






















