BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List 2026 Tamil Nadu: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள, 27 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

BJP Candidate List 2026 Tamil Nadu: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் களமிறங்க உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசமும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடன் விவரங்களை, டெல்லி தலைமை வெளியிட்டுள்ளது. அதில் எதிர்பார்த்தபடியே சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சவுந்தராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் - யார்? எந்த தொகுதியில் போட்டி
| தொகுதி எண் | தொகுதி | வேட்பாளர் |
| 1 | மயிலாப்பூர் | தமிழிசை சவுந்தரராஜன் |
| 2 | தளி | நாகேஷ் குமார் |
| 3 | மொடக்குறிச்சி | கிருத்திகா சிவக்குமார் |
| 4 | உதகமண்டலம் | போஜராஜன் |
| 5 | அவிநாசி | எல். முருகன் |
| 6 | திருப்பூர் தெற்கு | காடேஷ்வர தங்கராஜ் |
| 7 | கோவை வடக்கு | வானதி ஸ்ரீனிவாசன் |
| 8 | கந்தர்வகோட்டை | உதயகுமார் |
| 9 | புதுக்கோட்டை | ராமச்சந்திரன் |
| 10 | திருப்பத்தூர் | திருமாறன் |
| 11 | மதுரை தெற்கு | ராம ஸ்ரீனிவாசன் |
| 12 | சாத்தூர் | நயினார் நாகேந்திரன் |
| 13 | திருச்செந்தூர் | கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் |
| 14 | வாசுதேவநல்லூர் | ஆனந்தன் அய்யாசாமி |
| 15 | ராதாபுரம் | பாலகிருஷ்ணன் |
| 16 | நாகர்கோவில் | எம்.ஆர். காந்தி |
| 17 | விளவங்கோடு | விஜயதாரணி |
| 18 | ஆவடி | அஸ்வின்குமார் |
| 19 | திருவண்ணாமலை | ஏழுமலை |
| 20 | தஞ்சாவூர் | கருப்பு முருகானந்தம் |
| 21 | திருவாரூர் | கோவி சந்துரு |
| 22 | அறந்தாங்கி | கவிதா ஸ்ரீகாந்த் |
| 23 | மானாமதுரை | பொன் பாலகணபதி |
| 24 | ராமநாதபுரம் | நாகேந்திரன் |
| 25 | குளச்சல் | சிவக்குமார் |
| 26 | பத்மநாபபுரம் | ரமேஷ் |
| 27 | ராசிபுரம் | ப்ரேம்குமார் |
அண்ணாமலை அவுட்.. ஆதரவாளர்களும் அவுட்..
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதிக்குட்பட, 6 சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், அந்த ஆறு தொகுதிகளில் ஒன்றை கூட, அதிமுக தலைமை பாஜகவிற்கு வழங்கவில்லை. கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினாலும், வானதி ஸ்ரீனிவாசன் அதனை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும், குறைந்தபட்சம் தனது ஆதரவாளர்களான அமர்பிரசாத் ரெட்டி, எஸ்.ஜி. சூர்யா ஆகியோருக்காவது வாய்ப்பளிக்க வேண்டும் என கோரினாராம். ஆனால், அந்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு, அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாருக்குமே வாய்ப்பளிக்காமல் பாஜக தலைமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சரஸ்வதி அவுட்.. தொகுதி மாறிய 2 எம்.எல்.ஏக்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த நான்கு பேரில் ஒருவரான சரஸ்வதிக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் கடந்தமுறை வென்ற எம்.ஆர். காந்திக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி ஸ்ரீனிவாசன், இந்த முறை கோவை தெற்கிற்கு மாறியுள்ளார். திருநெல்வேலியில் ஐந்துமுறை போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்ற, நெல்லை தொகுதியிலிருந்து சாத்தூர் தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் மாறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























