மேலும் அறிய

BJP Candidate List: பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

BJP Candidate List 2026 Tamil Nadu: அண்ணாமலை அரசியலில் தனது அடுக்கட்ட முடிவை எப்படி எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்களும், அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

BJP Candidate List 2026 Tamil Nadu: தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், அவினாசி தொகுதியில் எல்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழக பாஜகவில் நன்கு அறிமுகமான அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தமிழக அரசியலில் பேசுப்பொருளானது. தொகுதிகள் ஒதுக்கப்பட்டும் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட தாமதாகமாகிக்கொண்டே இருந்தது. உத்தேச பட்டியல் வெளியானதில் மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்கள் என்று தெரியவந்தது.

ALSO READ | BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்

பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் தாமதத்திற்கு காரணம் அண்ணாமலை என்று கூறப்படுகிறது. அவர் கோவை வடக்கு, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட நினைத்ததாகவும், ஆனால், அதற்கு பாஜக தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வேற தொகுதியை ஒதுக்கீடு செய்வதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்து தொடர்ந்து பிடிவாதத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கும் சில தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டும் அண்ணாமலை கேட்டதாகவும் தெரிகிறது.

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், புதுச்சேரியில் இருந்த அண்ணாமலையை உடனே சென்னைக்கு வரக்கூறினார். உடனே ஹெலிகாப்டரில் வந்த அவர், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்களும், நலம்விரும்பிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இல்லாமல் போனது. அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவில் வேகமாக வளர்ந்து வந்தார் அண்ணாமலை. மூத்த தலைவர்களை ஓவர் டேக் செய்து வந்த அவரது வளர்ச்சி அபாரமாக இருந்தது என்று கூறினர். ஆனால், தற்போது, மூத்த தலைவர்கள்  கை இந்த தேர்தலில் ஓங்கியுள்ளது என்பதற்கு வேட்பாளர்கள் பட்டியலே சாட்சி.

இதனைத்தொடர்ந்து, அண்ணாமலை அரசியலில் தனது அடுக்கட்ட முடிவை எப்படி எடுப்பார் என்று அவரது ஆதரவாளர்களும், அரசியல் விமர்சகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
காரில் கொண்டுவரப்பட்ட 10 கோடி மதிப்பிலான நகைகள்.. பறக்கும் படை கண்ணில் சிக்கியது எப்படி !
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Embed widget