Teachers Recruitment: முதுநிலை ஆசிரியா், உடல்கல்வி இயக்குநா் பணிகள்.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. விவரம் இங்கே
பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 11 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது- ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1 போன்ற பணியிடங்களுக்கான உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டாயமாக படித்து முடித்தவுடன் நூற்றுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்ற உறுதியை அரசு சார்பில் தெரிவிப்பதாக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.சி.வெ.கணேசன் இன்று நாகர்கோவிலில் பேட்டி. pic.twitter.com/9995vASaMj
— AIR News Chennai (@airnews_Chennai) October 28, 2021
இந்நிலையில் அரசாணை நிலை எண்.144 பள்ளிக் கல்வி (ப.க.2(1)) துறை, நாள் 18.10.2021-இன் படி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால், உச்ச வயதுவரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 11 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் வாய்ப்பு: அக்.27க்குள் விண்ணப்பிக்கவும்!
பாரா மெடிக்கல் படிப்பு: விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!