அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் வாய்ப்பு: அக்.27க்குள் விண்ணப்பிக்கவும்!
அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ள அனைத்துப் பணியிடங்களுக்கும் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர், நூலகர்,உடற்கல்வி இயக்குனர் என பல பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்விப் பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது உதவிப்பேராசிரியர், நூலகர்,உடற்கல்வி இயக்குனர் என பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணியிடங்களுக்கான தகுதி, வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்:
இப்பணிக்கு மொத்தம் 65 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: B.E. / B.Tech., M.E. / M.Tech இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பிரிவுகளில் பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.
10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உதவிப்பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்:
இப்பணியிடங்களுக்கு மொத்தம் 134 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: B.E. / B.Tech., M.E. / M.Tech இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பிரிவுகளில் பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இணைப் பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 104
கல்வித்தகுதி : B.E. / B.Tech., M.E. / M.Tech இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட பிரிவுகளில் பிஎச்.டி முடித்திருக்க வேண்டும்.
மேலும் 8 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
நூலகர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை library science மற்றும் பிஎச்.டி படித்திருக்க வேண்டும். மேலும் 11 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
துணை நூலகர் பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை library science மற்றும் பிஎச்.டி படித்திருக்க வேண்டும். மேலும் 9 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உதவி நூலகர் பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடம் – 5
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை library science மற்றும் பிஎச்.டி படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 24 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உடற்கல்வி இயக்குனர் பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 1
கல்வித்தகுதி – இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை உடற்கல்வி மற்றும் பிஎச்.டி படித்திக்க வேண்டும். மேலும் 11 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
துணை உடற்கல்வி இயக்குனர் பணிக்கான தகுதிகள்:
காலிப்பணியிடம் – 1
கல்வித்தகுதி - இளங்கலை பட்டப்படிப்புடன் முதுகலை உடற்கல்வி மற்றும் பிஎச்.டி படித்திக்க வேண்டும். மேலும் 9 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் – மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், https://aurecruitment.annauniv.edu/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி : The Registrar, Anna University, Chennai – 600 025.
தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட எந்தப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தாலும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.