Quinton de Kock Apology: ‛ப்ளாக் லைவ்ஸ்’ விவகாரம்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் தெ.ஆப்பிரிக்கா வீரர் டி காக்!
கால்பந்து போட்டி ஒன்றில் தொடங்கப்பட்ட பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற ஒரு காலை மண்டியிட்டு வெளியிடும் ஆதரவு செயலை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளும் செய்து வருகின்றன.
நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் பல்வேறு அணிகளும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான தங்களுடைய குரலை பதிவு செய்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் மண்டியிட்டு பிளாக் லைவஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், விக்கெட் கீப்பர் பேட்டரான குயிண்டன் டி காக் ஆதரவு தர மறுத்துவிட்டார். இதனால், டி காக்கின் முடிவை எதிர்த்து சமூகவலைதளத்தில் கமெண்டுகள் வந்தன.
மேலும், இன்றைய போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போட்டிக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக அவர் விலகியது தொடர்பாக அணி நிர்வாகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தனது செயலுக்கு வருந்துவதாக குறிப்பிட்டு டி காக் மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Quinton de Kock statement 📝 pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021
கால்பந்து போட்டி ஒன்றில் தொடங்கப்பட்ட பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்ற ஒரு காலை மண்டியிட்டு வெளியிடும் ஆதரவு செயலை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் கிரிக்கெட் போட்டிகளின்போதும் செய்து வருகின்றன. நடப்பு டி-20 தொடரில் பங்கேற்றிருக்கும் கிரிக்கெட் அணிகளும் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் விவகாரத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்