மேலும் அறிய

TN TRB Recruitment 2024: விண்ணப்பித்துவிட்டீர்களா? உதவிப் பேராசிரியர் பணிக்கு 4000 பணியிடங்கள்- நாளையே கடைசி!

TN TRB Assistant Professor Recruitment 2024: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசித் தேதி ஆகும்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, 4000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்க நாளையே கடைசித் தேதி ஆகும். தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. 

நாளையே கடைசி

இதற்காக பணி இடங்களுக்கு மார்ச் 28 முதல் விண்ணப்பித்த நிலையில், தேர்வர்கள் நாளை (மே 15) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறலாம் (உத்தேசத் தேதி) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையே கடைசித் தேதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலி இடங்கள் விவரம்

ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் - 72

பற்றாக்குறை காலியிடங்கள் - 4

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் இடங்கள் – 3

தற்போதைய காலி இடங்கள் – 3921

மொத்த இடங்கள் 4000

வயது வரம்பு

உச்ச வயது வரம்பு அதிகம் அறிவிக்கப்படவில்லை. 01.07.2024 அன்று 57 வயது நிறைவடையாத தேர்வர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

* குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுநிலைப் பட்டம் அவசியம். எனினும் எஸ்சி/ எஸ்டி/ எம்பிசி / டிஎன்சி / பிசி தேர்வர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.

* நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வில் அல்லது ஸ்லெட் எனப்படும் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம்.

* அல்லது பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு நடத்தப்படும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம். 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://www.trb.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* அதில், https://trb1.ucanapply.com/register?sub_id=eyJpdiI6Im1LNkpYRWllbEtMS013Q2RPU2EzYXc9PSIsInZhbHVlIjoibG9WQWViTmRVY1JqMGI3UHdhT0l2QT09IiwibWFjIjoiNzI5NzIyNWU3ZGRhYTY1ZDI3ZDk4M2M1OTcyNGNhZGE4YWJhMjVkZTg2N2M3ZDdjM2I4MGY1MTU1YWE5NWE4MCIsInRhZyI6IiJ9  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* சரியான மொபைல் எண் மற்றும் இ- மெயில் முகவரியை அளித்து முன்பதிவு செய்யவும்.

* பிறகு, பெயர், விண்ணப்பிக்கும் பணியிடம், பாடம், பிறந்த தேதி, சமூகம், முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் சரியாக உள்ளிடவும்.

முழுமையான விவரங்களைப் பெற https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தொலைபேசி எண்கள்: 1800 425 6753 (10:00 am – 05:45 pm)

 இ மெயில் முகவரி: trbgrievances@tn.gov.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget