TN Arts College Admission : அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்... இதை தவற விடாதீங்க...!
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நானை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Arts College Admission : அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நானை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
முன்னதாக விண்ணப்பங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க (மே 19) கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நாளை (மே 22) விண்ணப்பிக்க கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனி தரவரிசைப் பட்டியல்
கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
கலந்தாய்வு எப்போது?
அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஜூன் 9ஆம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடைபெறும். அதேபோல, அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 2ஆம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பின்னர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://tngasa.org/ மற்றும் https://www.tngasa.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டண விவரம்
ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்:
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/-
பதிவுக் கட்டணம் - ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking மூலம் இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” நேரடியாகச் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.