TN 12th Result 2025: +2 தேர்வில் 599 மதிப்பெண் பெற்று பழனியை சேர்ந்த மாணவி சாதனை
பழனி மாணவி +2 தேர்வில் 599 மதிப்பெண் பெற்று சாதனை - தமிழ், கணக்குபதிவியல், வணிகவியல், பொருளியல், கணினி பயன்பாடு படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் தற்போது வெளியான பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் ஏனைய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதியவர்கள் 20,725அதில் மாணவர்கள் 9,716 பேர், மாணவிகள் 11,009. இந்த தேர்வில் 19,668 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியதில் மொத்தம் 94.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களும், 92.70% பேரும், மாணவிகளும் 96.84% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 94.90% தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 20வது திண்டுக்கல் மாவட்டம் இடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியா பிளஸ் 2 தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலப் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண் பெற்றுள்ளது மற்ற அனைத்து பாடப்பிரிவிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளது. TAMIL, COMMERCE, ACCOUNTANCY, COMPUTER APPLICATION, ECONOMICS, அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.
பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஓவிய அஞ்சலி, பிளஸ் டூ தேர்வு முடிவில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், கணக்குப்பதிவியல் ,வணிகவியல், பொருளியல் ,கணினி பயன்பாடு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ஓவியா அஞ்சலியை பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர். ஓவியா அஞ்சலி படித்து ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். பள்ளியில் தனக்கு ஆசிரியர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து கற்றுக் கொடுத்ததன் காரணமாக 599 மதிப்பெண் பெற்றதாகவும் , பத்தாம் வகுப்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.





















