மேலும் அறிய

Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்

Mahindras New Bigger EV BE 07: மஹிந்த்ராவின் புதிய பெரிய மின்சார காராக தயாராகி வரும் BE 07 கார் மாடல் குறித்த அம்சங்கள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Mahindras New Bigger EV BE 07: மஹிந்த்ராவின் புதிய பெரிய மின்சார காராக தயாராகி வரும் BE 07 கார் மாடல், உள்ளூர் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த்ராவின் புதிய பெரிய மின்சார கார்:

மஹிந்த்ராவின் இங்க்லோ ப்ளாட்ஃபார்ம் அடிப்படையிலான மின்சார எஸ்யுவிக்களான, XEV 9E, XEV 9S மற்றும் BE 6 ஆகிய மாடல்கள் ப்ரீமியம் மின்சார கார்களுக்கு உள்ளூர் சந்தையி நல்ல வரவேற்பு இருப்பதை உணர்த்தியுள்ளன. தனது மின்சார கார்களின் விற்பனை நிலையை மேலும் ஊக்குவிக்க, உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமானது புதிய BE 07 மாடலை வரும் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மின்சார எஸ்யுவி ஆனது தற்போது தீவிரமாக சாலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

மஹிந்த்ரா BE 07 - உட்புற அம்சங்கள், வசதிகள்

சாலை சோதனையின் போது முதல்முறையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, உட்புறம் தொடர்பான சில விவரங்களை வழங்கியுள்ளன. அதன்படி XEV 9E மாடலில் இருப்பதை போன்று இதில் மூன்று ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற்றுள்ளது. அவை சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுநருக்கான டிஸ்ப்ளே மற்றும் முன் பயணிக்கான டிஸ்ப்ளே உட்பட மூன்று 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் ஆகும். மஹிந்திரா BE 07-இல் விண்டோஸ்கிரீனில் தெரியும் டேஷ்கேம் டிஸ்ப்ளே, மஹிந்திராவின் பிரத்யேக லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவையும் உள்ளன. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் காலநிலை கட்டுப்பாடு, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டால்பி அட்மாஸுடன் கூடிய 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், லெவல் 2 ADAS உள்ளிட்ட ஏராளமான அம்சங்களும் அடங்கும்.

மஹிந்த்ரா BE 07 - வெளிப்புற வடிவமைப்பு

இந்த காரின் கான்செப்ட்டைப் போலவே, உற்பத்திக்குத் தயாரான மஹிந்த்ரா BE 07 மாடலானது 4565 மில்லி மீட்டர் நீளம், 1900 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1660 மில்லி மீட்டர் உயரம்  ஆகியவற்றுடன் 2775 மில்லி மீட்டர் நீளமுள்ள வீல்பேஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூடப்பட்ட க்ரில், C-வடிவ LED பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் முன்பக்கத்தில் நேர்த்தியான காற்றுத் துளைகளுடன் கூடிய ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை இடம்பெறும். மற்ற வடிவமைப்பு சிறப்பம்சங்களில், ஏரோடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட அலாய் வீல்கள், கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் கைப்பிடிகள், குட்டையான பின்புற விண்ட்ஷீல்டு, பெரிய டெயில்கேட் மற்றும் செங்குத்தாகப் பொருத்தப்பட்ட LED டெயில்லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

மஹிந்த்ரா BE 07 - பேட்டரி ஆப்ஷன்கள்

தற்போது 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் BE6 மாடலுடன், மஹிந்திரா BE 07 தனது பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பகிர்ந்துகொள்ளும் என கூறப்படுகிறது. அதேநேரம், BE6 உடன் ஒப்பிடும்போது, ​​அதன் பெரிய அளவுகள் மற்றும் அதிக எடை காரணமாக BE 07-இன் ரேஞ்ச் சற்றுக் குறைவாக இருக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட பேட்டரிகள் மூலம் 556 முதல் 683 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Nissan SUV: இனி பேச்சே இல்லை..! 36KM மைலேஜ் வழங்கும் ஜப்பான் எஸ்யுவி - 1980KM ரேஞ்ச், இந்தியாவில் எப்படி?

புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் உள்நாட்டு சந்தையில் டாடா ஹேரியர், பிஒய்டி அட்டோ 3 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஆகியவற்றுடன் போட்டியிடும். உள்ளூர் சந்தையில் இதன் தொடக்க விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Embed widget