மேலும் அறிய

Supplementary Exam Hall Ticket: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் எப்போது?- வெளியான அறிவிப்பு

TN 10th 11th Supplementary Exam Hall Ticket 2023: மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ பத்தாம்‌ வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச்‌ சீட்டுகளை ஜூன் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ பத்தாம்‌ வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச்‌ சீட்டுகளை ஜூன் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவித்துள்ளது. அத்துடன் அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ளுதல்‌ குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. துணைத் தேர்வு எழுத அரசுத்‌ தேர்வுத்‌ துறையால்‌ அறிவிக்கப்பட்ட நாட்களில்‌ விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும்‌ (தட்கல்‌ உட்பட) 20.06.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ வழியாக தேர்வுக்‌ கூட அனுமதிச்‌ சீட்டுகளை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச்‌ சென்று “HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ "HSE FIRST YEAR / SSLC - JUNE/JULY 2023) SUPPLEMENTARY EXAMINATION — HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை "Click" செய்ய வேண்டும்‌. 

அதை அடுத்து தோன்றும்‌ பக்கத்தில்‌, தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள்‌, விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப் பதிவெண் (PERMANENT REGISTER Number) மற்றும்‌ பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.

பத்தாம்‌ வகுப்பு அறிவியல்‌ பாட செய்முறைத்‌ தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்‌ தேர்வர்கள்‌ 22.06.2023 (வியாழக்கிழமை) முதல்‌ 23.06.2023 ( வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில்‌ அறிவியல்‌ பாட செய்முறைப்‌ பயிற்சி வகுப்புகள்‌ நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும்‌, இத்தேர்வர்கள்‌ தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத்‌ தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின்‌ விவரங்களை, சம்பந்தப்பட்ட
மாவட்டக்‌ கல்வி அலுவலர்களை நேரில்‌ அணுகி பெற்றுக்‌ கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படு கிறார்கள்‌.

உரிய தேர்வுக்‌ கூட அனுமதிச்‌ சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும்‌ தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌’’.

இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தேர்வில் தோல்வி அடைந்த/ வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வர்கள் மே 23 முதல் 27 ஆம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.  மேலும்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget