மேலும் அறிய

Original Mark Certificate: 10, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வு; அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? பெறுவது எப்படி?

மாணவர்கள் தங்களின் அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 04.10.2024 (வெள்ளிக்கிழமை) முதல்‌, அவர்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்‌.

2024ஆம் ஆண்டு 10, 11, பிளஸ் 2 துணைத் தேர்வை எழுதிய தேர்வர்கள், தங்களின் அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை  அக்டோபர் 4 முதல் பெறலாம்.

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ கூறி உள்ளதாவது:

’’நடைபெற்ற ஜூன்‌ / ஜூலை 2024 இடைநிலை/ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள்‌ (மறுகூட்டல்‌ / மறுமதிப்பீடு உட்பட), தங்களது அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை 04.10.2024 (வெள்ளிக்கிழமை) முதல்‌, அவர்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்‌.

பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ வழங்கும்‌ முறை:

நிரந்தர பதிவெண்‌ கொண்டு பத்தாம்‌ வகுப்பு தேர்வெழுதிய தேர்வர்கள்‌ இதற்கு முந்தைய பருவங்களில்‌ அவர்கள்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை ஜூன்‌ / ஜூலை 2024 துணைத்‌ தேர்வில்‌ தேர்டுவழுதி, அனைத்துப்‌ பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின்‌, அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண்‌ சான்றிதழ்களும்‌, முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள்‌ தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்படும்‌.

மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கும்‌ முறை:

புதிய நடைமுறையில்‌ (மொத்தம்‌ 600 மதிப்பெண்கள்‌) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ வழங்கும்‌ முறை

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு தேர்வுகளில்‌ அனைத்துப்‌ பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்‌, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (600 மதிப்பெண்கள்‌) மற்றும்‌ மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்‌) மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்‌.

மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்விலோ / இரண்டாம்‌ ஆண்டு தேர்விலோ அல்லது இரண்டு தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு, அவர்கள்‌ இரு தேர்வுகளிலும்‌ பெற்ற மதிப்பெண்களை பதிவுசெய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண்‌ பட்டியலாக வழங்கப்படும்‌. இம்மாணவர்கள்‌ மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு தேர்வுகளில்‌ அனைத்து பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண்‌ இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌.

பழைய நடைமுறையில்‌ (மொத்தம்‌ 1200 மதிப்பெண்கள்‌) +2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண்‌ சான்றிதழ்‌ வழங்கும்‌ முறை

பழைய நடைமுறையில்‌ (1200 மதிப்பெண்கள்‌) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு தேர்வர்கள்‌, இதற்கு முந்தைய பருவங்களில்‌ தேர்ச்சி பெறாத பாடங்களை, ஜூன்‌ / ஜூலை 2024 துணைத்‌ தேர்வில்‌ எழுதி அனைத்துப்‌ பாடங்களிலும்‌ தேர்ச்சி பெற்றிருப்பின்‌, அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களும்‌, முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள்‌ தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும்‌ பதிவு செய்து மதிப்பெண்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்படும்‌.

நிரந்தா பதிவெண் இல்லாமல்‌ (மார்ச்‌ 2016 பொதுத்‌ தேர்விற்கு முன்னர்‌) மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள்‌, தற்போது ஜூன்‌ / ஜூலை 2024 துணைத்‌ தேர்வெழுதி இருப்பின்‌, அவர்கள்‌ தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள்‌ மட்டும்‌ பதிவு செய்து மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget