Nellai School Wall Collapse: நெல்லை பள்ளி விபத்து : தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுண் பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை டவுண் பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியர் ஞானவள்ளி, உடற்கல்வி ஆசிரியர் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் கடந்த 17 ம் தேதி காலை இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன் , சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர் . மேலும் இந்த விபத்தில் சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சமும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சமும் அறிவித்தார். தொடர்ந்து, பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றம் கட்டிட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்விக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இந்த பள்ளி கட்டட விபத்து தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் ஆய்வுகள் முடிந்த பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆட்சியர் எடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்