TN 12th Public Exams: முடிந்தது பிளஸ் 2 பொதுத்தேர்வு .. விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் எப்போது? முழு விவரம்..
8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 156 மாணவர்களும், 4 லடசத்து 33 ஆயிரத்து 436 மாணவிகளும், 23 ஆயிரத்து 747 பேர் தனித்தேர்வர்களும், மாற்றுத் திறனாளிகள் 5 ஆயிரத்து 206 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறை கைதிகள் 90 பேரும் தேர்வை எழுதினர்.
இதேபோல் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 982 மாணவர்களும், 7 ஆயிரத்து 728 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். பிள்ஸ் 2 தேர்வுகளுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதி மொழி பாடங்களுடன் தொடங்கிய தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதலாம் என கூறியுள்ளார்.
10ஆம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தம்
இந்நிலையில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவு பெறுகிறது. வருகிற 10ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 ஆம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தது போல் எந்த மாற்றமும் இல்லாமல் மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்புகான தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu
ஏப்ரல் 6 - மொழித்தாள்
ஏப்ரல் 10 - ஆங்கிலம்
ஏப்ரல் 13- கணிதம்
ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல்