AI Training: ஆசிரியர் பணிக்கு ஆபத்தா? பள்ளிகளுக்கு ஏஐ பயிற்சி: கோடிகளில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்!
பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4,00,000 K-12 ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன.

பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஓப்பன் ஏஐ மற்றும் Anthropic ஆகியவை ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்க, லட்சக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
மைக்ரோசாஃப்ட், OpenAI மற்றும் Anthropic போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் சாட்போட்களை வகுப்பறைகளில் ஒருங்கிணைக்கும் நோக்கில், ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்க கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
அமெரிக்க ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து, இந்த முயற்சிகள் கல்வியாளர்களின் ஏஐ அறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் ஆசிரியர்கள் கற்றலை மேம்படுத்தவும், வழக்கமான பணிகளை தானியங்குபடுத்தவும், மாணவர் ஆதரவைத் தனிப்பயனாக்கவும் தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்த முடியும்.
வகுப்பறை பணிச்சுமை
செயற்கை நுண்ணறிவானது வீட்டுப் பாடங்களை உடனடியாக மதிப்பிடவும், பாடத் திட்டங்களை பாட்காஸ்ட்கள் அல்லது கதைப் புத்தகங்களாக மாற்றவும் தொடங்குவதால், வகுப்பறை பணிச்சுமை குறைகிறது. இருப்பினும், இயந்திரங்களுடன் ஆசிரியர்களின் நீண்டகாலப் பங்கு குறித்து கேள்விகள் எழுகின்றன.
இதன் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஆசிரியர்களின் தொழிற்சங்கமான American Federation of Teachers (AFT) உடனான கூட்டு முயற்சிகள் மூலம் கல்வியாளர்களுக்குத் திறனை மேம்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஒத்துழைப்பு கல்வியாளர்கள் ஏஐ கருவிகளை புத்திசாலித்தனமாகவும் சரியாகவும் பயன்படுத்தவும், கல்வியின் மையத்தில் மனிதர்களை வைத்திருக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனியார் ஊடக அறிக்கையின்படி, பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4,00,000 K-12 ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. இது இதுவரை இல்லாத வகையில் பெரிய அளவிலான முயற்சியாகும்.
என்னென்ன நிறுவனங்கள் பங்கேற்பு?
மைக்ரோசாஃப்ட், ஓப்பன் ஏஐ, Anthropic, American Federation of Teachers மற்றும் நியூயார்க்கை அடிப்படையாகக் கொண்ட United Federation of Teachers ஆகியவற்றின் ஆதரவுடன் National Academy of AI Instruction, கல்வியாளர்களுக்கான ஏஐ பயிற்சி பாடத்திட்டத்தை உருவாக்க உள்ளது. இதற்கு 23 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.






















