மேலும் அறிய

Teachers Day 2022: அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்

2022ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். இந்த விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.

மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் (அறிவியல் மாளிகை) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Teachers Day 2022: அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்

அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை, அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது.

இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இருந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் கே.ராமச்சந்திரன் 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராமச்சந்திரனுக்கு வழங்கினார். அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று அவர் விருது பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யார் இந்த ராமச்சந்திரன்?

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திரன்.

கோவிட் கால உதவி

கொரோனா காலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் விளிம்புநிலைக் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டது. அவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க முடிவெடுத்து, செல்போன்களைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன்.

கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இதன்மூலம் கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

தொடக்கப் பள்ளிக்கு தனி யூடியூப் பக்கம்!

students skills என்ற பெயரில் யூடியூபில், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கைத் தொடங்கி, மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார். 

தமிழர்களின் தொன்மையும் பெருமையுமான திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விதைத்து வருகிறார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுத்து, குறள்களை ஒப்புவிக்க வைக்கிறார். 


Teachers Day 2022: அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்

அதேபோல அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புறக் கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு இன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தமிழகம் வரும் அமித்ஷா!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! தமிழகம் வரும் அமித்ஷா!
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Christmas Celebration: நாடே உற்சாகம்.. நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
Embed widget