12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிப்புகளில் சேராத 8,588 பேருக்கு வழிகாட்டுதல் - பள்ளிக்கல்வித்துறை
12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத 8,588 பேருக்கு ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி படிப்புகளில் சேராத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்று 2022-13 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி பயிலாதவர்களை கண்டறிந்து, அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்கி உயர் கல்வியில் சேர்வதற்கு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Also Read: MK Stalin on Breakfast Scheme : காலை உணவு திட்டம்: "பசங்க சாப்டாங்களா?” விசாரித்த முதல்வர்
ஆலோசனைகளை வழங்க திட்டம்:
இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் 79,762 பேரில் 8,588 பேர் எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து 8,588 பேருக்கும் தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்க ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது. கல்வியை தொடராத மாணவர்களுக்கு மாநில திட்ட இயக்கத்திலிருந்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கல்வியை தொடராத மாணவர்களின் விவரங்களான தொலைபேசி எண்கள், கல்வி மாவட்டம் மற்றும் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. எனவே இது சார்ந்த தகவல்களை சேகரித்து மாநில திட்ட இயக்கத்திற்கு அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை மாநில திட்ட இயக்குநர் கேட்டு கொண்டுள்ளார்.
Also Read: Higher Education: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்: உயர் கல்வித்துறை
View this post on Instagram