TNPSC: டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் - அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்..
டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் பின்பற்றப்படவில்லை என கூறி தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
![TNPSC: டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் - அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்.. Tamil Nadu government appointing Sailendhra Babu as the Chairman of TNPSC was sent to the Governor of Tamil Nadu R.N. Ravi has sent back TNPSC: டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் - அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/d368762bf063bf30007d6989a61ce12c1692673179601589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற கூறிய வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என கூறி ஆளுநர் தமிழ்நாடு அரசின் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக அதாவது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர் சைலேந்திர பாபு. இவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கான தமிழக அரசு உயர்மட்டக் குழுவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்வது தொடர்பான கோப்பை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். பல்வேறு காரணங்கள் கூறியும், தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? எனவும் அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்குத் தேவையான ஊழியர்களைப் போட்டித் தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும். எனினும் இதற்குத் தலைவர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகள், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Madras Day 2023: சென்னையின் 384வது பிறந்தநாள்..! வசிப்போரின் உணர்வாய் மாறிய ஒரு வரலாற்று நகரம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)