CBSE Question Paper Leak: ‛சிபிஎஸ்இ தேர்வில் முறைகேடு: தேர்வுகளை ரத்து செய்யுங்கள்’ -சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க புகார் கடிதம்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாகவும் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நான்கு பதில்களில் ஒரு விடையை தேர்ந்தெடுக்கும் முறையிலான தேர்வு டிசம்பர் மாதத்திலும் விரிவான விடையளிக்கும் தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் என்ற வகையில் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாகவும் தேர்வில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ மேலாண் கூட்டமைப்பினர் சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், “தேர்வு தொடங்கும் முன்பே சில சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர்கள் கேள்வித்தாள்களையும் விடைகளையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடை தெரியாத கேள்விகளுக்கு ‘c' என்ற தேர்வை குறிப்பிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ‘c' என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான சரியான பதிலை ‘a, b, d’ என ஆசிரியர்களே மாற்றியமைக்கின்றனர்.
முதல் கட்ட தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் இரண்டாம் கட்டத் தேர்வில் மதிப்பிடப்படும் என்பதால் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. பள்ளியை சேராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். அதனால்தான் இதுபோன்று எளிமையாக குளறுபடி நடைபெறுகிறது. இதனால் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெறுகின்றனர். இதனால் அந்த பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியும் காட்டப்படுகிறது. எனவே அண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறு நடந்தால் மைய கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதுகுறித்து சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களுக்கு, சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில், பொதுத்தேர்வு நியாயமாக நடத்தப்பட வேண்டும். தேர்வில்ஏதேனும் விதிமுறை மீறல்கள்கண்டறியப்பட்டால் மைய கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்