(Source: ECI/ABP News/ABP Majha)
TN 10th,12th Result 2022: சேலம் மாவட்டம்: 12ம் வகுப்பில் 92.71% பேர் தேர்ச்சி; 10ம் வகுப்பில் 89.47% பேர் தேர்ச்சி
2019 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட அதிகமாக 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கொரோனா நோய் தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில்,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதற்கடுத்தபடியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி, ஜூன் 20 ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்
தேர்வு எழுதியவர்கள்
ஆண்கள்-17500
பெண்கள்-19661
மொத்தம்-37161
தேர்ச்சி பெற்றவர்கள்
ஆண்கள்-15674
பெண்கள்-18778
மொத்தம்-34452
சதவீதம் தேர்ச்சி விகிதம்
ஆண்கள்- 89.57%
பெண்கள்-95.51%
மொத்தம்-92.71%
கடந்த 2019 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சதவீதத்தை விட இது அதிகமாகும். 2019 ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட அதிகமாக 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்
தேர்வு எழுதியவர்கள்
ஆண்கள்-21,846
பெண்கள்-21,371
மொத்தம்-43,217
தேர்ச்சி பெற்றவர்கள்
ஆண்கள்-18,611
பெண்கள்-20,054
மொத்தம்-38,665
தேர்ச்சி பெறாதவர்கள் 4,552
தேர்ச்சி விகிதம்
ஆண்கள்- 85.19%
பெண்கள்-93.84%
மொத்தம்-89.47%
கடந்த 2019 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சதவீதத்தை விட இது குறைவாகும். 2019 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.5% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு அதை விட குறைவாக 89.47% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்