மேலும் அறிய

11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?

TN 11th Results 2024 District Wise Pass Percentage: 96.02 சதவீதத் தேர்ச்சியோடு கோவை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.

மாநிலம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 96.02 சதவீதத் தேர்ச்சியோடு கோவை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8,11,172 பேர் எழுதிய நிலையில், தேர்வில் 7,39,539 (91.17% ) பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 4.04 லட்சம் மாணவிகள் மற்றும் 3.35 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் 7.43 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3432 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாகத் தேர்ச்சி விகிதம்

இந்த நிலையில், 96.02 சதவீதத் தேர்ச்சியோடு கோவை மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன. குறிப்பாக 95.56% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது. 95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம்  3-வது இடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 81.40 ஆகும். 

1 கோயம்புத்தூர் - 96.02 தேர்ச்சி சதவீதம்
2 ஈரோடு - 95.56 தேர்ச்சி சதவீதம்
3 திருப்பூர்- 95.23 தேர்ச்சி சதவீதம்
4 விருது நகர் - 95.06 தேர்ச்சி சதவீதம்
5 அரியலூர் - 94.96 தேர்ச்சி சதவீதம்
6 பெரம்பலூர் - 94.82 தேர்ச்சி சதவீதம்
7 சிவகங்கை - 94.57 தேர்ச்சி சதவீதம்
8 திருச்சி - 94.00 தேர்ச்சி சதவீதம்
9 கன்னியாகுமரி - 93.96 தேர்ச்சி சதவீதம்
10 தூத்துக்குடி - 93.86 தேர்ச்சி சதவீதம்
11 திருநெல்வேலி - 93.32 தேர்ச்சி சதவீதம்
12 தென்காசி - 93.02 தேர்ச்சி சதவீதம்
13 ராமநாதபுரம் - 92.83 தேர்ச்சி சதவீதம்
14 நாமக்கல்- 92.58 தேர்ச்சி சதவீதம்
15 கரூர் - 92.28 தேர்ச்சி சதவீதம்
16 மதுரை - 92.07 தேர்ச்சி சதவீதம்
17 சென்னை - 91.68 தேர்ச்சி சதவீதம்
18 ஊட்டி- 91.37 தேர்ச்சி சதவீதம்
19 சேலம் - 91.30 தேர்ச்சி சதவீதம்
20 நாகப்பட்டினம் - 91.09 தேர்ச்சி சதவீதம்
21 கடலூர் - 91.01 தேர்ச்சி சதவீதம்
22 செங்கல்பட்டு - 90.85 தேர்ச்சி சதவீதம்
23 தர்மபுரி - 90.49 தேர்ச்சி சதவீதம்
24 தேனி - 90.08 தேர்ச்சி சதவீதம்
25 திண்டுக்கல்- 89.97 தேர்ச்சி சதவீதம்
26 விழுப்புரம் - 89.41 தேர்ச்சி சதவீதம்

27 தஞ்சாவூர் - 89.07 தேர்ச்சி சதவீதம்
28 திருவண்ணாமலை - 88.91 தேர்ச்சி சதவீதம்
29 புதுக்கோட்டை - 88.02 தேர்ச்சி சதவீதம்
30 ராணிப்பேட்டை- 87.86 தேர்ச்சி சதவீதம்
31 கிருஷ்ணகிரி -  87.82 தேர்ச்சி சதவீதம்
32 திருவாரூர் -  87.15 தேர்ச்சி சதவீதம்
33 காஞ்சிபுரம் - 86.98 தேர்ச்சி சதவீதம்
34 திருப்பத்தூர் (வி) - 86.88 தேர்ச்சி சதவீதம்
35 மயிலாடுதுறை - 86.39 தேர்ச்சி சதவீதம்
36 கள்ளக்குறிச்சி - 86.00 தேர்ச்சி சதவீதம்
37 திருவள்ளூர் - 85.54 தேர்ச்சி சதவீதம்
38 வேலூர் - 81.40 தேர்ச்சி சதவீதம்
39 காரைக்கால் -96.27 தேர்ச்சி சதவீதம்
40 புதுச்சேரி - 97.89 தேர்ச்சி சதவீதம்

மொத்தம் - 91.17 %

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
கியூட், பொதுத்தேர்வுகள்.. லட்சக்கணக்கான மாணவர் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை- பெரும் ஆபத்து!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Embed widget