மேலும் அறிய

TN 10th Result 2022:அதிர்ச்சி.. எஸ்எஸ்எல்சி தேர்வைப் புறக்கணித்த மாணவர் எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரிப்பு.. அதிரவைத்த தகவல்

10ஆம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.

10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும்.

தமிழில் 94.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 90.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாவணர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 16 ஆகும். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 ஆயிரத்து 424 ஆகும். அதாவது 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 242 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 நபர்கள் ஆவர்.

இந்நிலையில் 2022ஆம் கல்வி ஆண்டில் 42,519 மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதவில்லை. அதாவது மொத்தத்தில் 4.45% மாணவர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

TN 10th Result 2022:அதிர்ச்சி..  எஸ்எஸ்எல்சி தேர்வைப் புறக்கணித்த மாணவர் எண்ணிக்கை, 2 மடங்கு அதிகரிப்பு.. அதிரவைத்த தகவல்

இதற்கிடையே 2020 மற்றும் 2021ஆம் கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக, 10ஆம் வகுப்பில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை, 20,053 ஆக இருந்தது. இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 2.09 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.   

கொரோனா காரணமா?

இந்நிலையில் 2022ஆம் கல்வி ஆண்டில் 42,519 மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதவில்லை. 2019-ல் வராத 20,053 மாணவர்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதும்  ஆன்லைன் கல்வி முறையும் காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 

இதில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
Embed widget