Scholarship: திருவண்ணாமலை மாவட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
2023-2024 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 01.02.2024 முதல் மேற்காணும் இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதுப்பித்தல் (Renewal) மாணக்கருக்கான விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு தரவு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து (Tamil Nadu State Scholarship Portal – TNSSP) https://ssp.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பரீசீலிக்கப்பட்டு மாணாக்கரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2023-2024 ஆம் கல்வியாண்டி புதியதாக சேர்க்கை பெற்ற மாணாக்கர்கள் (Fresh students) கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 01.02.2024 முதல் மேற்காணும் இணையதளம் திறக்கபட்டுள்ளது. மேற்காணும் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயனடைய விரும்பும் மாணாக்கர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 2023-2024-ஆம் கல்வியாண்டிலிருந்து கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்களின் விவரங்களை University management and Information System (UMIS) தரவு தளத்திலிருந்தும் மற்றும் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கரின் விவரங்களை Educational Management Information System (EMIS) தரவு தளத்திலிருந்தும் Tamil Nadu State Scholarship Portal (TNSSP) தரவு தளத்துக்கு பதிவிறக்கம் செய்யப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட புதிய (Fresh) மாணாக்கர்கள் TNSSP என்ற இணையதளத்தில்
மாணாக்கர்களுக்கான Login-ல் ஆதார் எண்ணை உள்ளீடு செய்த பின் வரும் OTP-யினை கொண்டு மேற்காணும் இணையதளத்தில் தங்களுக்கான கல்வி உதவித்தொகையை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு கீழ்க்காணும் ஆவணங்கள் மற்றும் நெறிமுறைகள் அவசியமாகும்.
1.இணையவழியில் பெறப்பட்ட சாதிச்சான்று
2. இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று. (இணைய வழி வருமான சான்றானது மாணாக்கர், குடும்ப தலைவரின் பெயரில் பெற வேண்டும்)
3.மாணாக்கர்களின் வங்கி கணக்கானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு (Seeding) செயல்பாட்டில் (Active) உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தவர்கள் (Not Seeded). தங்களது வங்கி கிளைளை அணுகி ஆதார் எண்ணை வங்கியுடன் seed செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை ”ஆல யுயனாயச ”My Aadhar UIDAI” என்ற இணையத்தில் உறுதி செய்துகொள்ளலாம். ஆதார் எண்ணை வங்கியுடன் இணைக்காத மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை வழங்க இயலாது.
மேலும் விவரங்களுக்கு கல்வி உதவித்தொகை இணைய முகவரி (website address) https://ssp.tn.gov.in, கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கான தொலைபேசி எண்: (call centre no) 1800-599-7638 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.