SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA Strike: தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை
சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசிடம் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ககந்தீப் சிங் தலைமையிலான குழு இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
நல்ல முடிவு வருமா?
பேச்சுவார்த்தையின் முடிவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையுடன் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.






















