10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத மாணவர்களும் தனித்தேர்வர்களும் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும், இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத , வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் எப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் (Service Centres) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் மையங்கள் (Government Examinations Service Centres)
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின்(Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில்விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணம்- ரூ.125
ஆன்லைன் பதிவுக் கட்டணம்- ரூ.75
மொத்தம் - ரூ.195
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையத்தில் / பள்ளியில் பணமாகச் செலுத்த வேண்டும்.
துணைத் தேர்வு அட்டவணை
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.