மேலும் அறிய

TNPSC: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டத் தேர்வர்கள்; டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டத் தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டத் தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலை

இந்தத் தேர்வுகளுக்கு ஏற்கெனவே போதிய காலக்கெடு வழங்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அந்த பகுதிகளைச் சேர்ந்த தேர்வர்களை இந்த எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தென் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் எத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டன என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி தேர்வு

மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை. அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி எழுத்துத் தேர்வுகளை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் நவம்பர் 11ஆம் நாள் ஆகும். அதன்பின் சரியாக சரியாக 55 நாட்களில் ஜனவரி 6ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஐ.டி.ஐ முதல்வர் உள்ளிட்ட முக்கியமான பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித்தேர்வுகளுக்கு இந்த காலக்கெடு போதுமானது அல்ல.

போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நாளில் இருந்து 20 நாட்களில் சென்னை & புறநகர் மாவட்டங்கள் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 35 நாட்களில் தென் மாவட்டங்களை பேரிடர் தாக்கியது. அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடவில்லை. நிவாரணப் பணிகள் நிறைவடைய இன்னும் சில வாரங்கள் தேவை; இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருவதிலிருந்தே பாதிப்பின் தீவிரத்தை அறிந்துகொள்ள முடியும்.

வெள்ள பாதிப்புகளின் தீவிரம்

ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வை நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மழை & வெள்ள பாதிப்புகளின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. தேர்வர்களின் நலனில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அடுத்த ஆள்தேர்வு இன்னும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் நடைபெறும். மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

இந்தக் காரணங்களையும், மழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வுகளை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget