மேலும் அறிய
கைவினைஞர் பயிற்சி: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், கடைசி தேதி நெருங்குது - முழு விவரம் இதோ!
அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - முழு விவரம் உள்ளே.

கைவினைப் பொருட்கள்
Source : whats app
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2026 - ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தொழிற்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in -என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணமாக ரூபாய் 200- (ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பித்திடல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முழு விவரங்கள்
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலை கருத்தியல் (Theory) தேர்வானது வருகின்ற 4.11.2025 அன்றும், செய்முறை (Practical) தேர்வானது வருகின்ற 5.11.2025 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வராக பங்குபெறுவதற்க வருகின்ற 8.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். வருகின்ற 8.10.2025 ஆம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 99420 99481 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















