மேலும் அறிய
மதுரை மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... Baker & Confectioner பயிற்சில் சேரலாம், முழு விவரம் !
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழில் பயிற்சி.. மதுரை அரசு பயிற்சி நிலையத்தில் வாய்ப்பு.

பேக்கரி தொடர்பான பயிற்சி
Source : whats app
பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் எற்பாடு செய்துத் தரப்படும். - எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கென Baker & Confectioner என்ற புதிய தொழிற்பிரிவு
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கென Baker & Confectioner என்ற புதிய தொழிற்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அத்தொழிற்பிரிவில் பயிற்சியாளர்கள் சேருவதற்காக நேரடி சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.
தகுதி என்ன ?
இத்தொழிற்பிரிவின் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை செய்வதற்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை(UDID) 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் மற்றும் புகைப்படம் (5 எண்கள்) ஆகியவற்றுடன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் நேரில் வருகை தந்து நேரடி சேர்க்கை மூலம் ரூபாய் 185-ம், மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50-ம் கட்டணம் செலுத்தி பயிற்சியில் சேரலாம்.
பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் எற்பாடு செய்துத் தரப்படும்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு கீழ்க்காணும் சலுகைகள் அரசால் வழங்கப்படும். உதவித்தொகை மாதம் -ரூ.750, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற ஆண்-பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதம் ரூ. 1000-, இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி.. பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், இரண்டு செட் சீருடைகள் மற்றும் தையற்கூலி, ஒரு செட் காலணிகள்(Shoe), அடையாள அட்டை.. பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் எற்பாடு செய்துத் தரப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















