AYUSH: சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி... ஆயுஷ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்
சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, ஆயுஷ் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசித் தேதி ஆகும்.

சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, ஆயுஷ் ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசித் தேதி ஆகும்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் ஆயுஷ் படிப்புகளைக் கற்பித்து வருகின்றன.
ஆயுஷ் படிப்புகள்
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட (ஆயுஷ் - சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேத மருத்துவம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய 4 படிப்புகளும் ஆயுஷ் படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. நீட் மதிப்பெண் அடிப்படையில்தான் ஆயுஷ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, நீட் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான ஆயுஷ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. இதில் சேர மாணவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பாக : www.tnhealth.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர விண்ணப்பக் கட்டணமாக ரூ.500-ம், நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் ரூ.1000-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டு விதிகளின்படியும் நிர்வாகக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கு 85 சதவீதம் என ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து மாணவர்கள்,
The Secretary,
Selection Committee,
Directorate of Indian Medicine & Homoeopathy,
Arignar Anna Government Hospital of Indian Medicine Campus,
Arumbakkam,
Chennai – 600 106.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.
வயது வரம்பு, இட ஒதுக்கீடு, படிப்பு, கட்டணம், கல்லூரிகளின் பெயர், முகவரி, அங்கு உள்ள மொத்த மருத்துவ இடங்கள், இணைக்க வேண்டிய சான்றிதழ்களின் விவரங்கள் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிய: https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N23084068.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
அதேபோல நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிய: https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N23084065.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
தொலைபேசி எண்: 044-26216244
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnhealth.tn.gov.in
ஆண்டுதோறும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






















