SDAT Sports Hostel: விளையாட்டு வீரர்கள் விடுதிகளில் மாணவர் சேர்க்கை - முக்கிய அறிவிப்புகள் என்னென்ன ?
SDAT Sports Hostel Online Application 2024: 2024- 2025ஆம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் (CoE), விளையாட்டு விடுதிகள் (SH) மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் (SHE) பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2024-2025ஆம் ஆண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகள் குறித்த விளக்கம் கீழ்க்கண்டவாறு:
முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) - (6th, 7th & 8th Std)
விளையாட்டு |
மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம் |
நாள் மற்றும் ஆஜராகும் நேரம் |
|
தடகளம் (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ) மேசைப்பந்து (ஆ) & (பெ), டேக்வாண்டோ (ஆ) & (பெ) பளுதூக்குதல் (ஆண்கள் மட்டும்) |
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். சென்னை |
07.05.2024 காலை 7:00 மணி |
|
இறகுப்பந்து (ஆ) & (பெ), வில்வித்தை (ஆ) & (பெ) |
நேரு பூங்கா விளையாட்டரங்கம், சென்னை |
||
ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆ) & (பெ), நீச்சல் (ஆ) & (பெ) |
வேளச்சேரி நீச்சல் குள வளாகம், சென்னை |
||
டென்னிஸ் (ஆ) & (பெ), |
நுங்கம்பாக்கம், டென்னிஸ் விளையாட்டரங்கம், சென்னை |
||
சைக்கிளிங் (ஆ) & (பெ) |
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகம், மேலகோட்டையூர் (TNPESU) செங்கல்பட்டு |
விளையாட்டு விடுதி (Sports Hostel) – (7th, 8th,, 9th & 11th Std)
விளையாட்டு |
மாவட்ட அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம் |
நாள் மற்றும் ஆஜராகும் நேரம் |
தடகளம் (ஆ) & (பெ), கூடைப்பந்து (ஆ) & (பெ) கால்பந்து (ஆ) & (பெ), கைப்பந்து (ஆ) & (பெ), ஹாக்கி (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), கையுந்துபந்து (ஆ) & (பெ), கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), நீச்சல் (ஆண்கள் மட்டும்) |
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகம், மேலகோட்டையூர் (TNPESU) செங்கல்பட்டு மாவட்டம் |
ஆண்கள் - 10.05.2024 காலை 7:00 மணி பெண்கள் - 11.05.2024 காலை 7:00 மணி |
மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது. |
விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு (Sports Hostel – State Level Direct Selection)
(7th, 8th,, 9th & 11th Std)
விளையாட்டுகள் |
தேர்வுகள் நடைபெறும் இடம் |
நாள் மற்றும் ஆஜராகும் நேரம் |
குத்துச்சண்டை (ஆ) & (பெ), வாள்விளையாட்டு (ஆ) & (பெ), ஜுடோ (ஆ) & (பெ), பளுதூக்குதல் (ஆ) & (பெ), ஸ்குவாஷ் (ஆண்கள் மட்டும்) |
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை |
13.05.2024 (ஆண்கள் மட்டும்) காலை 7:00 மணி 14.05.2024 (பெண்கள் மட்டும்) காலை 7:00 மணி |
டேக்வாண்டோ (ஆ) & (பெ) |
மாவட்ட விளையாட்டரங்கம், கடலூர் |
|
மல்லர்கம்பம் (ஆண்கள் மட்டும்)
|
மாவட்ட விளையாட்டரங்கம், விழுப்புரம் |
|
மல்யுத்தம் (Wrestling) (ஆண்கள் மட்டும்) வூஷூ (Wushu) (ஆண்கள் மட்டும்) |
மாவட்ட விளையாட்டரங்கம், திருச்சி |
சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) (கல்லூரி மாணவ, மாணவியர்க்கான)
விளையாட்டு |
மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் இடம் |
நாள் மற்றும் ஆஜராகும் நேரம் |
தடகளம் (ஆ) & (பெ), குத்துச்சண்டை (ஆ) & (பெ), கபாடி (ஆ) & (பெ), பளுதுாக்குதல் (ஆ) & (பெ), |
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை |
06.05.2024 / காலை - 7:00 மணி |
கூடைப்பந்து (ஆ) & (பெ), கையுந்துப்பந்து (ஆ) & (பெ) கைப்பந்து (ஆ) & (பெ), கால்பந்து (ஆ) & (பெ) வாள் விளையாட்டு (ஆண்கள் மட்டும்) |
நேரு உள் விளையாட்டரங்கம், சென்னை |
06.05.2024 / காலை - 7:00 மணி |
ஹாக்கி (ஆ) & (பெ) |
MRK ஹாக்கி விளையாட்டரங்கம், சென்னை |
06.05.2024 / காலை - 7:00 மணி |
நீச்சல் (பெண்கள் மட்டும்) |
நீச்சல் குள வளாகம், வேளசேரி, சென்னை |
06.05.2024/ காலை - 7:00 மணி |
மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் குறித்த விவரம் கீழ்க்கண்டவாறு
விளையாட்டு விடுதி விவரம் |
ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் |
சிறப்பு நிலை விளையாட்டு விடுதி (SHE) |
05.05.2024 / மாலை 5.00 மணி |
முதன்மை நிலை விளையாட்டு மையம் (CoE) |
06.05.2024 / மாலை 5.00 மணி |
விளையாட்டு விடுதி (SH) |
08.05.2024 / மாலை 5.00 மணி |
குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண். 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.