மேலும் அறிய

School Working Hours: பள்ளிகளுக்கான வேலை நேரம் என்ன? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பள்ளிகளுக்கான வேலை நேரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிகள் நாளை (ஜூன் 13) திறக்கப்படும் நிலையில், பள்ளிகளுக்கான வேலை நேரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ கீழ்க்காணும்‌ கால வேளைகள்‌ அந்தந்தப்‌ பள்ளிகள்‌ தொடங்கும்‌ நேரத்தை அடிப்படையாகக்‌ கொண்டும்‌ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 2022-2023ஆம்‌ கல்வியாண்டு நாட்காட்டியில்‌ உள்ளவாறும்‌ பின்பற்றுதல்‌ வேண்டும்‌. (இக்கால வேளை 6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு, நடுநிலைப்‌ பள்ளியில்‌ செயல்படும்‌ 6 - 8 வகுப்புகளுக்கும்‌ பொருந்தும்‌‌).

School Working Hours: பள்ளிகளுக்கான வேலை நேரம் என்ன? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

School Working Hours: பள்ளிகளுக்கான வேலை நேரம் என்ன? - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

குறிப்பு: பள்ளிகளின்‌ அமைவிடம்‌, போக்குவரத்து வசதிகள்‌ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தந்தப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்,‌ பள்ளி மேலாண்மைக் குழுக்களுடன்‌ கலந்தாலோசித்து பள்ளி திறக்கும் முடிக்கும்‌ நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம்‌.

கீழ்க்காணும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள்‌ / அனைத்து வகை ஆசிரியர்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

1. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல்‌ வேண்டும்‌. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ மாணவர்களின்‌ வருகை, ஒழுக்கம்‌, சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்‌. ஒவ்வொரு வகுப்பிற்கும்‌ வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள்‌ உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள்‌ குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள்‌ அனைவரையும்‌ இப்பாட வேளைகளில்‌ விளையாட வைக்கவேண்டும்‌. 

வாரத்தில்‌ ஒரு நாளில்‌ பள்ளி நேரம்‌ முடிந்தவுடன்‌ அனைத்து மாணவர்களுக்கும்‌ கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்யவேண்டும்‌. மாணவர்கள்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை, 9 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 10 ஆம்‌ வகுப்பு, 11 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்‌.

2. தலைமையாசிரியர்‌ / உதவி தலைமையாசிரியர்‌ முன்னிலையில்‌ காலை வணக்கக்‌ கூட்டம்‌ நடைபெறுதல்‌ வேண்டும்‌. காலை வணக்கக்‌ கூட்டத்தில்‌ மாணவர்களை தவறாமல்‌ கலந்துகொள்ளச்‌ செய்ய வேண்டும்‌.

3. மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம்‌ ஐந்தாம்‌ பாடவேளை ஆசிரியர்கள்‌ வாயிலாக மாணவர்கள்‌ சிறார்‌ பருவ இதழ்‌, செய்தித்தாள்‌, பள்ளி நூலகத்திலுள்ள நூல்கள்‌ போன்றவற்றை வாசிக்கச்‌ செய்ய வேண்டும்‌.

4. வாரத்திற்கு ஒரு நாள்‌ அனுபவப்‌ பகிர்வு / நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர்‌ பொறுப்பேற்று மாணவர்களின்‌ மனநலன்‌ சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்‌.

5. வாரத்திற்கு ஒரு நாள்‌ நூலகச்‌ செயல்பாடுகளுக்கென நேரம்‌ ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பார்வையில்‌ கண்ட சுற்றறிக்கையில்‌ விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌ கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை செவ்வனே பின்பற்ற வேண்டும்‌.

6. ஒவ்வொரு மாதமும்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டம்‌ நடத்த (பள்ளிகளுக்கு உகந்த வேறு தினம்‌ இருப்பின்‌ அந்த தினத்திலும்‌ நடத்திக்கொள்ள ) ஏற்கெனவே அறிவுரைகள்‌ வழங்கப்பட்டுள்ளன. அதே நாளில்‌ பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில்‌ பெற்றோர்‌ கூட்டம்‌ நடத்தப்பெற வேண்டும்‌. 

இக்கூட்டத்தில்‌ ஆசிரியர்‌, பெற்றோரிடம்‌ அவர்தம்‌ குழந்தைகளின்‌ வருகை, கற்றல்நிலை, உடல்‌ நலம்‌, மன நலம்‌, கல்வி இணைச்‌ செயல்பாடுகள்‌, கல்விசாராச் செயல்பாடுகள்‌ என பள்ளியின்‌ அனைத்து நடவடிக்கைகளையும்‌ விவாதிப்பதுடன்‌, ஒவ்வொரு நாளும்‌ வீட்டில்‌ மாணவரின்‌ கற்றல்‌ சார்ந்து பெற்றோர்‌ செய்யவேண்டிய பணிகளையும்‌ எடுத்துக்கூற வேண்டும்‌. மேலும்‌, பள்ளியின்‌ கட்டமைப்பு வசதிகள்‌ குறித்தும்‌, அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக்குழு எடுத்து வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ தகவல்‌ தெரிவிக்கவேண்டும்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vidaamuyarchi Boxoffice: தி கோட் படத்தின் முதல் நாள் வசூல், மிஞ்சியதா அஜித்தின் விடாமுயற்சி? மொத்த வசூல் எத்தனை கோடிகள்?
Vidaamuyarchi Boxoffice: தி கோட் படத்தின் முதல் நாள் வசூல், மிஞ்சியதா அஜித்தின் விடாமுயற்சி? மொத்த வசூல் எத்தனை கோடிகள்?
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 17 மாணவர்கள் பலி! எப்படி?
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 17 மாணவர்கள் பலி! எப்படி?
Sonu Sood: அச்சச்சோ..! ஜனநாயகன் சோனு சூட்டை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு - செய்த குற்றம் தெரியுமா?
Sonu Sood: அச்சச்சோ..! ஜனநாயகன் சோனு சூட்டை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு - செய்த குற்றம் தெரியுமா?
வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி
வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK CouncillorTVK Issue : 60 லட்சம் மோசடி!தவெக நிர்வாகி மீது புகார்தலைவலியில் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vidaamuyarchi Boxoffice: தி கோட் படத்தின் முதல் நாள் வசூல், மிஞ்சியதா அஜித்தின் விடாமுயற்சி? மொத்த வசூல் எத்தனை கோடிகள்?
Vidaamuyarchi Boxoffice: தி கோட் படத்தின் முதல் நாள் வசூல், மிஞ்சியதா அஜித்தின் விடாமுயற்சி? மொத்த வசூல் எத்தனை கோடிகள்?
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 17 மாணவர்கள் பலி! எப்படி?
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – 17 மாணவர்கள் பலி! எப்படி?
Sonu Sood: அச்சச்சோ..! ஜனநாயகன் சோனு சூட்டை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு - செய்த குற்றம் தெரியுமா?
Sonu Sood: அச்சச்சோ..! ஜனநாயகன் சோனு சூட்டை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு - செய்த குற்றம் தெரியுமா?
வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி
வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா  வெற்றி!
IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்! வாயடைத்து நின்ற கவர்னர் தரப்பு? குஷியில் தமிழக அரசு!
அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்களின் கை கால் கட்டபட்டதா.! ஜெய்சங்கர் சொன்னது என்ன?
அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்களின் கை கால் கட்டபட்டதா.! ஜெய்சங்கர் சொன்னது என்ன?
Toll Pass: அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
அடிக்கடி சுங்கச்சாவடிய கிராஸ் பண்றவங்களா நீங்க.? உங்க காச சேமிக்க சூப்பர் திட்டம் வருது...
Embed widget