மேலும் அறிய

செப். 1ம் தேதி ஸ்கூலுக்கு போறீங்களா... கண்டிப்பா இதை பாலோ பண்ணனும்!

வகுப்பறைகள், நூலகங்கள், சத்துணவு சமையல் கூடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் உட்பட பள்ளி சார்ந்த அனைத்து இடங்களும் தொற்று பாதிப்பு இல்லாமல் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் முதல் நாள் தொடங்கி பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாநில சுகாதாரத்துறை பள்ளிகளுக்கான நிலையான நெறிமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி பள்ளிக்கு வந்த ஒருவாரத்துக்குள் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், ஊசி போடும் வயது வரம்பை எட்டிய மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அந்த நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதுதவிர, வகுப்பறைகள், நூலகங்கள், சத்துணவு சமையல் கூடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் உட்பட பள்ளி சார்ந்த அனைத்து இடங்களும் தொற்று பாதிப்பு இல்லாமல் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள் அடிக்கடித் தொடும் மேசைகள், பலகைகள் உட்பட அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வகுப்பறைகளில் ஒவ்வொருவரும் ஆறு அடிதூர இடைவெளி விட்டு நிற்கவேண்டும்.வகுப்பறையில்தான் வகுப்புகள் நடத்த வேண்டும் என இல்லாமல் பெரிய ஹாலில் கூட வகுப்புகள் நடத்தலாம். தட்பவெப்பம் அனுமதித்தால் வெளிப்புறத்தில் கூட வகுப்புகளை நடத்தலாம். 

ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 50 சதவிகித நபர்களுடன் வகுப்புகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கான அடையாளங்களை பள்ளி வகுப்புகள் உட்பட அனைத்திலும் நடைமுறைபடுத்த வேண்டும். இந்த நெறிமுறைகள் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக் கமிட்டிகள் என அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.  கைகளை சுகாதாரமாகப் பராமரிப்பது, மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும்’ என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக, செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில், பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். வரும் 27-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளார். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்று கூறினார்.பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி  செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு  தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்குகிறது என அவர் தெரிவித்திருந்தார்.

அப்போதுதான் அவர், செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Also Read: மாருதி சுசுகி கார் புக் செய்தீர்களா? டெலிவரிக்கு காத்திருங்கள்... காரணம் இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
மதுரையில் 5 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு.. வயிறும், மனசும் நிறைய செய்யும் சமூகப் பணி !
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Praggnanandhaa: என்னடா இது..! கார்ல்சனையே கதறவிட்ட குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா - பட்டம் போச்சா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
Elon Musk: நான் வரேன்.. புரட்சி ஸ்டார்ட், புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், ட்ரம்ப் கதை ஓவரா?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
Tamilnadu Roundup: அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.. இபிஎஸ் நாளை முதல் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.. இபிஎஸ் நாளை முதல் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Embed widget