என் பையன் ஏன் அப்படி மாத்தி சொன்னான்னு தெரியல! - அமைச்சர் அன்பில் மகேஸ் கலகல!
ஆம் வகுப்பு வரும்போது வேறு பாடம் படிக்கிறேன் என கேட்டார். தமிழ்மாதிரி வராது.
என் பையன் தமிழ்தான் படிக்கிறான். ஏன் மாத்தி சொன்னான்னு தெரியல என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ், “எனது இரண்டாவது மகன் தமிழ்தான் படித்துக்கொண்டிருக்கிறார். 6ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் தான் படித்துக்கொண்டிருந்தார். 7ஆம் வகுப்பு வரும்போது வேறு பாடம் படிக்கிறேன் என கேட்டார். தமிழ்மாதிரி வராது. ட்ரைப்பண்ணி பாரு என்று சொன்னேன். பிரெஞ்சு படித்தார். அது கஷ்டமாக இருக்கு என்று இப்போது மீண்டும் 8ஆம் வகுப்பில் தமிழ் தான் படிக்கிறார்.
சத்யா மேடம் தான் அவரது டீச்சர். எதனால் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. திடீரென மைக் நீட்டி கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் சொல்லிவிட்டதாக கூறினார். கவலைப்பட வேண்டாம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பையன் தமிழ் தான் படித்துக்கொண்டிருக்கிறார்.” எனத் தெரிவித்தார்
மேலும், பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம் குறித்து பேசிய அமைச்சர், “பசங்க விளையாட்டுத்தனமாக ஆபத்தான முறையில் பயணம் செய்வது ஆபத்தானதுதான். அவ்வாறு செய்யக்கூடாது. நானே அறிவுறுத்தியுள்ளேன். இதை ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோரும் கவனம் எடுத்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்றார்.