மேலும் அறிய

GATE Exam: பொறியியல் மேற்படிப்புக்கு கேட் தேர்வு முக்கியம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்படி?

பொறியியல் நுழைவுத் தேர்வான GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

பொறியியல் நுழைவுத் தேர்வான GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை ஐஐஎஸ்சி பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், கால அவகாசம் அக்.5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

மாணவர்களின் தொடச்சியான கோரிக்கைகளை ஏற்று, கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதக் கட்டணம் செலுத்தாமல் அக்.12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக்டோபர் 20ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக அக்.13 வரை இவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2024ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கிடையே மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். 

முக்கிய தேதிகள்

கேட் தேர்வு இந்தியா முழுவதும் பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது. ஜனவரி 3ஆம் தேதி அன்று அனுமதிச் சீட்டு வெளியாகும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்கள் 

நாடு முழுவதும் இந்தியாவுக்குள் மட்டுமே கேட் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வை நடத்தும் ஐஐஎஸ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வர்கள், இந்தியாவுக்கு வந்து தேர்வை எழுதலாம். எனினும் போக்குவரத்து, தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்களை செய்துகொள்ள வேண்டும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் gate2024.iisc.ac.in என்ற முகவரியை க்ளிக் செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து விரிவாக அறிய https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், என்ன தகுதி என்று மாணவர்கள் இங்கே https://gate2024.iisc.ac.in/eligibility-criteria/ தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Madurai: விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike -  போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike - போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
Embed widget